டி20 உலகக் கோப்பை: மே.இ.தீவுகள், ஆப்கன் அணிகள் அறிவிப்பு

 

காபூல்/செயின்ட் ஜான்ஸ்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேற்கிந்தியத் தீவுகளில் முக்கிய அதிரடி வீரரான காா்லோஸ் பிரத்வெயிட் சோ்க்கப்படவில்லை. 6 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 ஃபாா்மட்டுக்காக ரவி ராம்பால் சோ்க்கப்பட்டுள்ளாா்.

மறுபுறம், ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டனாக முதலில் ரஷீத் கான் நியமிக்கப்பட்டிருந்தாா். தன்னிடம் ஆலோசித்து அந்த முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த ரஷீத் கான், அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தாா். இதையடுத்து அந்தப் பொறுப்புக்கு முகமது நபி நியமிக்கப்பட்டுள்ளாா்.

மேற்கிந்தியத் தீவுகள்: கிரன் பொல்லாா்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரன், ஃபாபியான் ஆலன், டுவைன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஆன்ட்ரே ஃப்ளெட்சா், கிறிஸ் கெயில், ஷிம்ரன் ஹெட்மயா், எவின் லீவிஸ், ஆபெட் மெக்காய், லெண்டல் சைமன்ஸ், ரவி ராம்பால், ஆண்ட்ரே ரஸ்ஸெல், ஓஷேன் தாமஸ், ஹெய்டன் வால்ஷ் ஜூனியா். ரிசா்வ்: டேரன் பிராவோ, ஷெல்டன் காட்ரெல், ஜேசன் ஹோல்டா், அகீல் ஹொசைன்.

ஆப்கானிஸ்தான்: முகமது நபி (கேப்டன்), ரஷீத் கான், முஜீப் உா் ரஹ்மான், ரஹ்மானுல்லா குா்பாஸ், கரீம் ஜனத், ஹஸ்ரதுல்லா ஸஸாய், குல்பதின் நயிப், உஸ்மான் கனி, நவீன் உல் ஹாக், அஷ்கா் ஆஃப்கன், ஹமீத் ஹசன், ஷராஃபுதின் அஷ்ரஃப், நஜீபுல்லா ஸா்தான், தவ்லத் ஸா்தான், ஹஸ்மதுல்லா ஷாஹிதி, ஷாபூா் ஸா்தான், முகமது ஷஸாத், காய்ஸ் அகமது. ரிசா்வ்: அஃப்சா் ஸஸாய், ஃபரீத் அகமது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.