தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட தமிழக போலீஸ்.! அதிர்ச்சியில் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பு.!

இணையதளங்களில் விளையாடப்படும் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுக்களால் தமிழகத்தில் பலரும் பணத்தை இழந்து தற்கொலை செய்து வந்த துயரம் அரங்கேறவே, அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் முதல் ஆளாக ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்..

வெற்றி., வெற்றி.! தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து, ஆலோசனை வழங்கிய  மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal

இதனையடுத்து, தொடர்ந்து உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரிக்க, தமிழகத்தின் அன்றைய எதிர்க்கட்சி தலைவர், இன்றைய முதல்வர் மு.க ஸ்டாலின் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தமிழகத்தில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, தொடர்ந்து பலர் தற்கொலை செய்ய தொடங்கியதால் அன்றைய முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டத்தை இயற்றினார். 

BREAKING: இன்று தமிழக முதல்வர் தாக்கல் செய்ய போகும் மிக முக்கிய சட்ட  மசோதா.! எந்த எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேறுவது உறுதி.! - Seithipunal

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை தடை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் முதல் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் தற்கொலை சம்பவங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஆன்லைன் ரம்மி ஆட்டத்தால் பணத்தை இழந்த காவலர் ஒருவர் இன்று துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இந்நிலையில், தமிழக போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட கூடாது என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கோரிக்கை வைத்துள்ளார்.

திருட்டு பணத்தில் ஆன்லைன் ரம்மி.. கொள்ளையர்களின் பகீர் வாக்குமூலம்.!! -  Seithipunal

காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், “ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டத்தில் காவலர்கள் ஈடுபடக்கூடாது. காவலர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாடி அதிக அளவில் பணத்தை இழந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

காவலர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது மிகவும் வருத்தமளிக்கும் நிகழ்வாகும். காவலர்களின் இந்த செயலால் அவர்களின் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் பாதிக்கப்படுகின்றனர்” என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.