ரஷ்ய படப்பிடிப்பை முடித்த அன்பறிவு படக்குழு புகைப்படத்தை வெளியிட்டது !

|

சென்னை : ஹிப்ஹாப் ஆதியின் நடிப்பில் உருவாகி வருகிற அன்பறிவு படத்தை அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கி வருகிறார்.

இதுவரை சிட்டி பாயாக கலக்கி வந்த ஹிப்ஹாப் ஆதி இப்படத்தில் வில்லேஜ் பாயாக நடிக்கிறார். உடன் நெப்போலியன், ஊர்வசி, விதார்த் என பலர் நடிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்தி வந்த அன்பறிவு படக்குழு படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம்

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வர இப்பொழுது இயக்குனர் அட்லி இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கத்தில் அன்பறிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்துவரும் ஹிப்ஹாப் ஆதி இந்தப் படத்திலும் அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் நடித்து வர இதன் படப்பிடிப்பு முதல்கட்டமாக மதுரையில் நடைபெற்றது.

ஆதியை கிராமத்து பையனாக பார்க்க

ஆதியை கிராமத்து பையனாக பார்க்க

இதுவரை சிட்டி பாயாக கலக்கிக் கொண்டிருந்த ஹிப்ஹாப் ஆதி முதல் முறையாக வில்லேஜ் பாயாக இப்படத்தில் நடிக்க இருப்பதால் ஆதியை கிராமத்து பையனாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆதி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் கதாநாயகியாக அறிமுகமான காஷ்மீரா பர்தேசி இதில் கதாநாயகியாக நடித்து வருகிறார் . நெப்போலியன்,ஊர்வசி,விதார்த், சங்கீதா உள்ளிட்ட பலர் இதில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் .

சத்யஜோதி ஃபிலிம்ஸ்

சத்யஜோதி ஃபிலிம்ஸ்

சத்யஜோதி ஃபிலிம்ஸ் அன்பறிவு படத்தை தயாரித்து வருகிறது. அதேசமயம் ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து வரும் சிவகுமாரின் சபதம் என்ற படத்தையும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது. அன்பறிவு படத்தில் நெப்போலியன் ஹிப்ஹாப் ஆதி தாத்தாவாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதியே இசை அமைக்கிறார்.

 ரஷ்ய படப்பிடிப்பு நிறைவு பெற்றது

ரஷ்ய படப்பிடிப்பு நிறைவு பெற்றது

முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடத்தி முடித்த கையோடு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சில நாட்களுக்கு முன்பு ரஷ்யாவில் தொடங்கிய படக்குழு இப்பொழுது அனைத்து காட்சிகளையும் எடுத்து முடித்து விட்டதாக அறிவித்துள்ளது. ஹிப்ஹாப் ஆதி நடித்த படங்களிலேயே இந்தப் படம் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஷ்யா படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளதையடுத்து இப்பொழுது வைரலாகி வருகிறது.

English summary
Adhi has completed shooting for his upcoming movie ‘Anbarivu’ recently.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.