லாபமா? நஷ்டமா? மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதனின் கடைசி படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்!

By Mari S

|

சென்னை: ஏற்கனவே சங்கத்தமிழன், பூமி உள்ளிட்ட படங்கள் விவசாயம் பற்றி பேசிய நிலையில், அதே கான்செப்டில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள லாபம் திரைப்படம் இன்று வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதி ஹாசன், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விவசாயம் தான் மிகப்பெரிய தொழில் என்பதை உணர்த்தும் வகையில் உருவாகி உள்ள லாபம் திரைப்படம் படமாக எப்படி இருக்கு என நெட்டிசன்கள் விமர்சித்துள்ள விமர்சனங்களை இங்கே காண்போம்.

இயக்குநர் மறைவு

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடமை படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்பி ஜனநாதனின் கடைசி படமாக விஜய்சேதுபதியின் லாபம் மாறி விட்டது. இந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென ஜனநாதன் மறைந்தது அந்த படக்குழுவினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகுக்கும் பேரிழப்பாக மாறியது.

தேசிய விருது

தேசிய விருது

மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கிய அத்தனை படங்களும் தரமான படங்கள் தான். அவரது இயக்கத்தில் ஷாம், அருண் விஜய் நடிப்பில் வெளியான முதல் படமான இயற்கை திரைப்படம் தேசிய விருதை வென்றது. சமூக அக்கறை கொண்ட அவர் தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடமை உள்ளிட்ட படங்களிலும் நல்ல கருத்துக்களையே திரைப்படமாக உருவாக்கினார்.

வாத்தியார்

வாத்தியார்

ஜீவா நடித்த ஈ படத்தில் பயோ வார் குறித்து அப்போதே பாடம் நடத்திய வாத்தியார் எஸ்.பி. ஜனநாதன். அதே போல ஜெயம் ரவியை வைத்து பேராண்மை படத்தில் பொருளாதாரம் குறித்த பாடத்தை படத்தின் காட்சியாகவே வைத்து அசத்திய ஜனநாதன் இந்த படத்தில் விவசாயம் பற்றிய பாடத்தை எடுத்திருக்கிறார்.

ட்விட்டர் விமர்சனம்

ட்விட்டர் விமர்சனம்

கொரோனா லாக்டவுன் முடிந்து மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் இன்று முதல் தான் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக ஆரம்பித்துள்ளன. முதல் படமாகவே துணிச்சலோடு வெளியாகி உள்ள விஜய்சேதுபதியின் லாபம் திரைப்படம் எப்படி இருக்கு? என்னவெல்லாம் கமெண்ட் சொல்லி உள்ளனர் என்பதை பார்ப்போம்.

பெரும் நஷ்டம்

பெரும் நஷ்டம்

திரையரங்குகளில் வெளியாகி உள்ள லாபம் சினிமாவாக பெரும் நஷ்டம் என இந்த நெட்டிசன் கடும் விமர்சனத்தை கொடுத்துள்ளார். அரை வேக்காடான படமாக இருக்கிறது என்றும், அங்கங்கே வெட்டி ஒட்டியது போல காட்சிகள் இருப்பதாகவும், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை விஜய்சேதுபதி லெக்சர் கொடுத்துக் கொண்டே டார்ச்சர் செய்கிறார் என கிழித்து தொங்கவிட்டு இருக்கிறார்.

ஓடாதுன்னு தெரிஞ்சு

ஓடாதுன்னு தெரிஞ்சு

லாபம் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இது தெரிஞ்சு தான் நான் முதல் நாள் படத்துக்கே போகல.. பூமி, சங்கத் தமிழன் மாதிரி இந்த படமும் விவசாயத்தை பற்றி பாடம் நடத்துகிறேன் என கிளம்பி ஃபிளாப் ஆகி உள்ளது. ஓடாதுன்னு தெரிஞ்சும் படம் எடுக்கிறது நடிக்கிறது நம்ம ஊர்ல தான் நடக்கும் என இந்த ரசிகர் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

ஜனநாதன் சார் இருந்தாருன்னா

ஜனநாதன் சார் இருந்தாருன்னா

லாபம் படத்தோட இயக்குநர் ஜனநாதன் சார் இருந்தாருன்னா இப்போ கூட நியாயமான விமர்சனங்களை தான் எதிர்பார்த்து இருப்பார். சிலர் ஜனநாதன் சார் மறைந்து விட்டார் என்பதற்காக ஃபேக்கான விமர்சனம் சொன்னாலும் உண்மையில் படம் நல்லா இல்லை என்பது தான் நிஜம் என விமர்சித்துள்ளார்.

English summary
Makkal Selvan Vijaysethupathi’s Laabam movie twitter review and reactions going viral in social media. Lot of SP Jananathan and Vijaysethupathi fans got disappointed over the movie plot and screen play.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.