விஜய் கிட்ட 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன்..அவர் ஒத்துக்கவே இல்ல – ஜெய் உருக்கம் !

|

சென்னை :தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் உறுப்பினர்களின் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாஸ்டர் தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ, நடிகர் ஜெய் மற்றும் சுப்பு பஞ்சு கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் சுவாரஸ்யமாக பல செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.

ஜெய் உருக்கம்

நடிகர் ஜெய் பேசும்போது பகவதி படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடித்தேன். அதன் பிறகு அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று இதுவரை 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன். ஆனால், அவர் நீ தான் ஹீரோ ஆகிட்டல்ல.. அப்புறம் ஏன்.. என்று கேட்டு விட்டார்.

திருமணம் எப்போது என்ற கேள்விக்கு, சிம்பு திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் . அனேகமாக சிம்புவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும் என்று நினைக்கிறேன் என்றார். சிம்பு திருமணத்திற்கு பிறகு என் திருமணம் என்று ஜெய் கூறியதற்கு சிம்பு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்துள்ளனர் .

அரசி வில்லன்

அரசி வில்லன்

பஞ்சு சுப்புவிடம், ‘கசடதபற’வில் வில்லனாக நடித்த அனுபவம் பற்றி கேட்டதற்கு, “நான் வில்லனாக நடிப்பது முதல் முறையல்ல. நான் நடிக்க வந்த ஆரம்பத்தில் ‘அரசி’ சீரியலில் கொடூர வில்லனாக நடித்திருந்தேன். அதில் நடித்தபோது, ஊரே திட்டித் தீர்த்தது. ஆனால், மக்கள் மனதில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ நின்று விட்டது. என்னைப் பொருத்தவரை இப்படித்தான் நடிப்பேன் என்பது கிடையாது. எந்த மாதிரி கதாபாத்திரமானாலும் நடிக்கத் தயார் தான்” என்றார்.

தியேட்டர் தான் மாஸ்

தியேட்டர் தான் மாஸ்

‘ஓடிடியால் தியேட்டர்களுக்கு எதிர்காலம் இருக்குமா?’ என்ற கேள்விக்கு, “ஓடிடி போல் எத்தனை புதிய விஷயங்கள் வந்தாலும் தியேட்டரில் படம் பார்க்கிற அனுபவம் எதிலும் கிடைக்காது. சினிமா இருக்கும் வரை தியேட்டர்களும் இருக்கும்” என்றார்.ஜெய் இசையமைப்பாளர் ஆகியிருக்கிறாரே. உங்கள் படத்தில் அவருக்கு வாய்ப்பு தருவீர்களா?’ என்று கேட்டதற்கு, “அப்பா எடுத்த எல்லா படங்களுக்கும் இசை இளையராஜா தான். நட்பு, அன்பு காரணமாக அதை அவர் கொள்கையாகவே இதனை கடைப்பிடித்தார். இளையராஜா இல்லையென்றால் அவரது வாரிசுகள் தான் எங்கள் படங்களுக்கு இசையமைப்பார்கள். ஜெய் என் தம்பி எப்போதும் எங்கள் படங்களில் நடிக்கலாம்” என்றார்,விரைவில் அடுத்தடுத்த படங்கள் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மாஸ்டர் தயாரிப்பாளர்

மாஸ்டர் தயாரிப்பாளர்

மாஸ்டர் பட தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ பேசும் போது, மதுரையில் நாங்கள் மிடில் கிளாஸ் குடும்பம். என் அப்பா பள்ளி ஆசிரியர். மாமியார் கணவர் எல்லாருமே கல்வி துறையில் இருந்தவர்கள். ஆனால் விஜய்யின் ஆரம்ப கட்ட படங்கள் சிலவற்றை தயாரித்தோம். பல்வேறு துறைகளில் நாங்கள் பயணிக்கிறோம்,அதற்கு சரியான திட்டமிடல் அவசியம்.

பெண்களுக்கு ஆதரவு

பெண்களுக்கு ஆதரவு

பெண்களுக்காக நான் எப்போதும் குரல் கொடுக்கிறேன். அவரது திறமைகள் முடங்கிவிட கூடாது. அவர்கள் எல்லா துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும். காலம் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் விஜய்யுடன் இணைந்து படம் செய்வோம். தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் என் மருமகன் படத்தை தயாரித்து வருகிறோம் என்றார்.

English summary
Actor Jai upset over Actor Vijay’s advice. Jai asked Vijay several times about starring with him but he gave a funny reply.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.