உலகை உலுக்கிய செப்டம்பர் 11 தாக்குதல்; 20வது நினைவு தினம்..!!

அமெரிக்காவை மட்டுமல்ல, உலகத்தியே அதிர்ச்சிக்குள்ளாக்கிய, பயங்கரவாத சம்பவத்தின் 20 ஆண்டுகள் நிறைவு தினம் இன்று.  2001 செப்டம்பர் 11 அன்று காலை 8.45 மணிக்கு, அல் கொய்தா பயங்கரவாதிகள் உலக வர்த்தக மையத்தின் மீது விமானங்களை மோதியதில், அதன் இரண்டு கோபுரங்களும் சீட்டு கட்டை போல் நொறுங்கி விழுந்தன. நியூ­யார்க்­கில் இருந்த இரட்­டைக் கோபு­ரத்தை அல்­காய்தா பயங்­க­ர­வாத அமைப்பு, கடத்திய விமானங்களை மோதி தகர்த்­தது. இரண்டு விமானங்கள் இரட்டை கோபுரம் மீது மோதிய நிலையில், மூன்றாவது விமானம் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் மீது மோதியது. தாக்குதலுக்கு அல் கய்தா இயக்கமும், ஒசாமா பின் ல்லேடனும் பொறுப்பேற்றனர். 

2,983 பேரை பலிகொண்ட பயங்கரவாத தாக்குதலால் அமெரிக்கா நிலைகுலைந்தது. இந்த தாக்குதலுக்கு  பின் அமெரிக்கா  பயங்கரவாத  எதிர்ப்பு போரை தொடங்கியது. 2011, மே முதல் தேதியன்று, அமெரிக்காவின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களில் சுமார் 20 வீரர்கள் பின் லேடன் வீட்டு மாடியில் தரையிறங்கி அவரை சுட்டு வீழ்த்தினார்கள். 
 ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா மீதான பயங்கரவாத தாக்குதலுக்காக, அல்கெய்தா பயங்கரவாதவாதிகளை அழிக்க களம் இறங்கிய அமெரிக்கா, இந்த  20-ம் ஆண்டு நினைவு தினத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறி விட்டது.  ஆனால், இன்று ஆப்கானிஸ்தான், அதே பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியுள்ளது. அந்நாடு,  தாலிபான்களின் பிடியில் சிக்கியிருப்பதோடு, உலகிற்கே அவர்கள் அச்சுறுத்தலாக மாறியுள்ளனர். 
பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா ஆப்கானிஸ்தானில்  தொடங்கிய போர், அதிகாரபூர்வமாக முடிந்துவிட்டாலும்,  ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சி தொடங்கி அங்கு மிக மோசமான சூழ்நிலை நிலவுகிறது. 

இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளை அழிக்க உறுதி பூண்ட அமெரிக்க அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தலிபான்கள் (Taliban) மீது போர் தொடுத்து, அவர்களின் ஆட்சியை அமெரிக்க படைகள் அகற்றின. பின் ஜனநாயக ரீதியிலான அதிபர் தேர்தல் நடத்தி , புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறுவப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.