ஏகப்பட்ட சர்ச்சை காட்சிகள்.. தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைக்க முடியாமல் திணறும் தலைவி!

By Mari S

|

சென்னை: இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி நடிப்பில் இன்று வெளியாகி உள்ள தலைவி படத்திற்கு மக்களின் ஆதரவு நாடு முழுவதும் கொஞ்சம் கூட இல்லாதது திரையுலகினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

தனிப்பட்ட முறையில் சினிமா பிரபலங்களுக்கும், விமர்சகர்களுக்கும் போடப்பட்ட ப்ரிவியூ ஷோவை பார்த்து விட்டு பலரும் புகழ்ந்த நிலையில், கதை ரீதியாக ஏகப்பட்ட சமாளிஃபிகேஷன் செய்து சொதப்பி உள்ளார் இயக்குநர் ஏ.எல். விஜய் என தலைவிக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தியேட்டரில் புதிய படங்கள் வெளியானாலும் தியேட்டருக்கு மக்களை ஈர்க்கும் நடிகர்கள் இல்லாதது தான் காரணம் என திரையரங்க உரிமையாளர்களே கருத்து தெரிவித்துள்ளனர்.

தலையில் துண்டு

மறைந்த இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள லாபம் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி மீண்டும் மக்களை கவரும் என எதிர்பார்த்த திரையரங்க உரிமையாளர்களுக்கு ஏன்டா படத்தை வாங்கினோம் என்கிற அளவுக்கு படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்து தலையில் துண்டு போட வைத்தது.

திணறும் தலைவி

திணறும் தலைவி

விஜய்சேதுபதியின் லாபம் கை விட்டால் என்ன தலைவி படமாவது தியேட்டருக்கு ஆடியன்ஸை வரவழைத்து விடும் என எதிர்பார்த்த தியேட்டர் ஓனர்களுக்கு மீண்டுமொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தலைவி படத்தை பார்க்கவும் ரசிகர்கள் விடுமுறை தினமான இன்றும் ரசிகர்கள் ஆர்வம் காட்டாதது மிகப்பெரிய இழப்பை அந்த படம் சந்திக்க நேரும் சூழலுக்கு கொண்டு போய் விட்டுள்ளது.

ஆர்.எம். வீரப்பன் வில்லனா

ஆர்.எம். வீரப்பன் வில்லனா

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள தலைவி படத்தில் ஆர்.எம். வீரப்பன் கதாபாத்திரத்தை வில்லன் கதாபாத்திரமாக சித்தரித்து இருப்பதற்கு கடும் எதிர்ப்புகள் அரசியல் ரீதியாக எழுந்துள்ளன. மேலும், பல சர்ச்சை காட்சிகளும் படத்தில் இடம்பெற்று இருந்தாலும் படத்தை பார்க்க தியேட்டருக்கு பொது மக்கள் வராததற்கு மேலும் ஒரு பெரிய காரணம் உள்ளது.

பாலிவுட் நடிகை

பாலிவுட் நடிகை

ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தில் நடித்திருந்தாலும் நடிகை கங்கனா ரனாவத்தை கோலிவுட் ரசிகர்கள் பாலிவுட் நடிகையாகவே பார்க்கின்றனர். நயன்தாரா, அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ் என தென்னிந்திய நடிகைகள் நடித்திருந்தால் இந்த படத்திற்கு ஓப்பனிங் கிடைத்திருக்கும் என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன.

ஜெயம் ரவியை போட்டிருந்தால்

ஜெயம் ரவியை போட்டிருந்தால்

தாம் தூம் படத்தில் நடித்த ஜெயம் ரவியையே இந்த படத்திலும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தால் அவருக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு ரசிகர்களை தியேட்டருக்கு வர வைத்திருப்பார் என்றும் அரவிந்த் சாமி நல்ல நடிப்பையே வெளிப்படுத்தி இருந்தாலும் தியேட்டருக்கு FDFS பார்க்க ரசிகர்களை அவராலும் ஈர்க்க முடியவில்லை.

கொரோனா பயம்

கொரோனா பயம்

நல்ல தொழில்நுட்பத்துடன் நடிகர்கள் நன்றாக நடித்திருந்தாலும் இப்படி பல சிக்கல்களில் சிக்கி கங்கனா ரனாவத்தின் தலைவி திரைப்படம் தவித்து வருவதால் முதல் நாள் வசூல் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருக்காது என்றே கூறப்படுகிறது. கோலிவுட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் கங்கனா ரனாவத்தின் தலைவிக்கு இதே நிலைமை தானாம்.

வீட்டிலேயே புதுப்படம்

வீட்டிலேயே புதுப்படம்

சந்தானத்தின் டிக்கிலோனா ஒடிடியில் வெளியான நிலையில் பல ரசிகர்களும் வீட்டில் கொழுக்கட்டை, சுண்டல் சாப்பிட்டுக் கொண்டே குடும்பத்துடன் புதுப்படம் பார்த்து வருகின்றனர். மேலும், மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் விஜய்சேதுபதியின் இன்னொரு புதுப்படமான துக்ளக் தர்பார் ரிலீசாவதால் இளைஞர்கள் தியேட்டருக்கு செல்லும் வாய்ப்பையும் ஒடிடி முடக்கி உள்ளது.

English summary
Kangana Rananut’s Thalaivi will face huge problems after its theatrical release today. Fans still avoid theaters due to Corona threat and this also affects Thalaivi’s Box office in a huge margin.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.