கால் வச்ச இடத்திலெல்லாம் கண்ணிவெடி வச்சாங்க.. ஷங்கர் பக்கம் திரும்பவே மாட்டேன்.. வடிவேலு அதிரடி!

|

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் மற்றும் தயாரிப்பில் இனிமேல் நடிக்கவே மாட்டேன் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

நடிகர் ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு.

தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். தனது காமெடியால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் வடிவேலு.

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு கூட்டணியில் மாபெரும் வெற்றிபெற்ற இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தின் 2வது பாகத்தை இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற பெயரில் உருவாக்க திட்டமிட்டனர்.

ஷங்கருக்கு பல கோடி இழப்பு

ஷங்கருக்கு பல கோடி இழப்பு

ஆனால் அப்போது திரைக்கதையில் மாற்றம் செய்யக்கோரி நடிகர் வடிவேலு வற்புறுத்தியதால் படக்குழுவுக்கும் வடிவேலுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் படத்தில் நடிக்காமல் விலகினார் நடிகர் வடிவேலு. இதன் காரணமாக இயக்குநர் ஷங்ருக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

பல முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது

பல முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது

இதனை தொடர்ந்து வடிவேலு இனிமேல் நடிக்கக்கூடாது என ரெட் கார்டு பெற்றார். இதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார் வடிவேலு. இதுதொடர்பாக பலமுறை ஷங்கர் மற்றும் வடிவேலு தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.

பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது

பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது

இந்நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர் ’23-ம் புலிகேசி 2′ திரைப்படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார். மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேசி மேற்கண்ட பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது” என அறிவிக்கப்பட்டது.

ஆண்டவன் புண்ணியத்தில் பட வாய்ப்பு

ஆண்டவன் புண்ணியத்தில் பட வாய்ப்பு

இதனை தொடர்ந்து நடிகர் வடிவேலு அடுத்தடுத்து 5 படங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது. இருப்பினும் நாய் சேகர் பட டைட்டிலுக்காக சில பஞ்சாயத்துக்களும் அரங்கேறின. இந்நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ஆண்டவன் புண்ணியத்தில் தனக்கு தற்போது பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது என்றார்.

விவேக் இழப்பை மறக்க முடியாது

விவேக் இழப்பை மறக்க முடியாது

மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறிய நடிகர் வடிவேலு, தான் முதல்வரை சந்தித்த பிறகு தனது லைஃப் பிரைட்டாக மாறிவிட்டது என்றார். திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்றும் உதயநிதி ஸ்டாலின் உடன் நடிப்பேன் என்றும் கூறினார். விவேக் எனக்கு அருமையான நண்பர் என்றும் அவரது இழப்பை மறக்க முடியாது என்றும் மிகப்பெரிய வேதனை என்றும் கூறினார். விவேக் இடத்தையும் நிரப்ப வேண்டிய சூழ்நிலையில் தான் இருப்பதாகவும் தெரிவித்தார் வடிவேலு .

நாய் சேகர் பட தலைப்பு

நாய் சேகர் பட தலைப்பு

மேலும் நாய் சேகர் படத்தின் தலைப்பு எனக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்ற வடிவேலு இந்த படத்தில் ஒரு பாட்டு பாட இருக்கிறேன் என்றும் கூறினார். மேலும் நான் நடிக்காமல் இருந்த நேரத்தில், கொரோனா வந்து என் பிரச்சனையை சாதாரணமாக ஆக்கிவிட்டது என்று கூறிய வடிவேலு அந்த நேரத்தில் மக்களுக்கு நான் நடித்த காமெடி காட்சிகள் கைகொடுத்தது என்றும் தெரிவித்தார்.

கால வைத்த இடத்திலெல்லாம் கண்ணி வெடி

கால வைத்த இடத்திலெல்லாம் கண்ணி வெடி

தொடர்ந்து நான்கு படத்தில் நடிக்க இருக்கிறேன் என்று கூறிய வடிவேலு தனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் சுபாஷ் கரண் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி கூறினார். தொடர்ந்து பேசிய வடிவேலு, தனக்கு எண்டே கிடையாது என்றும் தான் கால் வைத்த இடத்தில் எல்லாம் கண்ணிவெடி வைத்தார்கள், எல்லாவற்றில் இருந்தும் தப்பி விட்டேன் என்றும் கூறினார். தன் மீது வந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய் என்றும் நடிகர் வடிவேலு கூறினார்.

ஷங்கர் இயக்கத்தில் நடிக்க மாட்டேன்

ஷங்கர் இயக்கத்தில் நடிக்க மாட்டேன்

மேலும் இனிமேல் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என்றும் அதேபோல் வரலாற்று படத்தில் நடிக்க மாட்டேன் என்றும் அதிரடியாக கூறினார் நடிகர் வடிவேலு. தொடர்ந்து பேசிய நடிகர் வடிவேலு சினிமாவில் நடிக்க இருக்கும் செய்தி கேள்விப்பட்டு, லாரன்ஸ், சிவகார்த்திகேயன், அர்ஜுன் உள்ளிட்ட பலர் போன் செய்து வாழ்த்தினார்கள் என்றும் கூறினார். இறுதியாக ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்’ என்ற பாடலைப் பாடி குஷிப்படுத்தினார் நடிகர் வடிவேலு.

அடுத்தடுத்து படங்களில் கமிட்டான வடிவேலு

அடுத்தடுத்து படங்களில் கமிட்டான வடிவேலு

நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர்’ படத்தில் நடிக்கிறார். அதனைத் தொடர்ந்து 2 படங்களில் நாயகனாக நடிக்கிறார் வடிவேலு. இதனை தொடர்ந்து சில படங்களில் காமெடியனாகவும் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் நடிகர் வடிவேலு. இதனிடையே ஓடிடியில் ரிலீஸ் ஆகும் வகையில் தயாராகும் சில படங்களிலும் வடிவேலு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் வடிவேலு சில டிவி நிகழ்ச்சிகளிலும் என்ட்ரி கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் வடிவேலு அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி இருப்பது கடந்த சில ஆண்டுகளாக அவரை திரையில் காணாமல் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் சினிமாவில் பிஸியாகி உள்ள நடிகர் வடிவேலுவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

English summary
Actor Vadivelu says he will not act in Director Shankar’s movie anymore. He says he will continuously act in movies hereafter.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.