குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்!

ஹைலைட்ஸ்:

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி
தென் ஆப்பிரிக்க அரசு தொடங்கியது

தென் ஆப்பிரிக்க நாட்டில், குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அந்நாட்டு அரசு தொடங்கி உள்ளது.

இந்தியா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
கொரோனா தடுப்பூசி
போடப்பட்டு வருகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அந்நாட்டு அரசு தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆறு மாதம் முதல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 2 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தாயின் சடலத்தை ஓராண்டாக அறையில் பதுக்கிய மகன்! – நடந்தது என்ன?

சீனாவின் சினோவாக் கொரோனா தடுப்பூசியை தென் ஆப்பிரிக்க அரசு செலுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் 28 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். முன்னதாக, கியூபா, கனடா, அமெரிக்கா, ஐக்கிய அமீரகம், சீனா ஆகிய நாடுகளும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றன.

உள்ளாட்சி தேர்தலில் எங்களது திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்!

இதற்கிடையே, ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை, 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு செலுத்த, தென் ஆப்பிரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 28 சதவீதத்தினர், 15 வயதுக்கு கீழே உள்ளவர்கள் ஆவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.