ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை தள்ளிபோனது; என்ன ஆச்சு? அடுத்து எப்போது?

ஹைலைட்ஸ்:

நேற்று அதிகாலையிலேயே அறிக்கை விட்ட ஜியோ நிறுவனம்
ஜியோ போன் நெக்ஸ்ட் விற்பனை தள்ளிப்போனது
உடன் அதற்கான காரணத்தையும், புதிய லான்ச் டைம்லைனும் அறிவிப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட
ஜியோபோன் நெக்ஸ்ட்
ஸ்மார்ட்போனின் வெளியீடு தாமதமானது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 44 வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (ஏஜிஎம்) அறிவிக்கப்பட்டபடி, ஜியோபோன் நெக்ஸ்ட் விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் 10 அன்று அறிமுகம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

2 மலிவான ஜியோ போன் ரீசார்ஜ்கள் திடீர் நிறுத்தம்; பயனர்கள் ஷாக்!

எனினும், நேற்று அதிகாலை ஊடகங்களுக்கு அளித்த ஒரு அறிக்கையின் வழியாக,
ஜியோ போன் நெக்ஸ்ட்
ஸ்மார்ட்போன் ஆனது இன்று அல்ல, வருகிற தீபாவளிக்கு விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Jio-வின் இந்த 1095GB டேட்டா பிளானுக்கு போட்டி.. “கடல்லயே” இல்லயாம்!

இந்த தாமத்திற்கு என்ன காரணம்? இதுபற்றி ஜியோ நிறுவனம் என்ன கூறியுள்ளது? ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் புதிய வெளியீட்டு தேதி என்ன? 4ஜி க்கு பதிலாக 5ஜி போனாக வெளியாகுமா? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? போன்ற அனைத்து கேள்விகளுக்குமான விடைகள் இங்கே:

ஜியோபோன் நெக்ஸ்ட் வெளியீடு ஏன் தாமதமானது?

ஜியோபோன் நெக்ஸ்ட் வெளியீடு தாமதமானதற்கான “குறிப்பிட்ட காரணத்தை” ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும் வெளியான ஊடக அறிக்கையில், தற்போது தொழில்துறையில் நிலவும் உலகளாவிய சிப் பற்றாக்குறையை பற்றி நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது, இதுவே ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் தாமதத்திற்கு காரணம் என்பது போல் தெரிகிறது.

நினைவூட்டும் வண்ணம், கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே உலகளவில் சிப் தொழில் பற்றாக்குறையின் கீழ் உள்ளது. இந்த பற்றாக்குறை ஆட்டோ மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உள்ள நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளது. மேலும் இது பல ஸ்மார்ட்போன்கள், டிவிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்தது.

சிப் பற்றாக்குறை ஒருபக்கம் இருக்க, ஜியோபோன் நெக்ஸ்ட் ஆனது “மேம்பட்ட சோதனைகளில்” உள்ளது மற்றும் புதிய ஜியோபோனை அறிமுகம் செய்ய ஜியோ மற்றும் கூகுள் கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளதாகவும் வெளியான அறிக்கை கூறுகிறது.

ஜியோபோன் நெக்ஸ்ட் இன்னமும் சோதனை நிலையில் உள்ளதா?

நிறுவனத்தின் கூற்றுப்படி, செப்.10 முதல் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்ட ஜியோபோன் நெக்ஸ்ட் ஆனது “தற்போது வரையறுக்கப்பட்ட பயனர்களுடன் சோதனை செய்யப்படுகின்றன” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாமதம் குறித்து ரிலையன்ஸ் ஜியோ என்ன கூறி உள்ளது?

வெளியான ஊடக அறிக்கையின் வழியாக, ரிலையன்ஸ் ஜியோ கூறுகையில், “இரு நிறுவனங்களும் ஜியோபோன் நெக்ஸ்டை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுடன் மேலும் செம்மைப்படுத்த சோதனை செய்யத் தொடங்கியுள்ளன. தீபாவளி பண்டிகைக் காலங்களில் இது மிகவும் பரவலாக கிடைக்கச் செய்ய தீவிரமாக வேலை நடக்கிறது”.

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் புதிய வெளியீட்டு தேதி என்ன?

ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகம் பற்றி நிறுவனம் கூறி உள்ளது அனைத்துமே – தீபாவளி சீசன் என்பது மட்டுமே. இதன் பொருள் நவம்பர் 2 – 4 ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கலாம். ஏனெனில் நவம்பர் 2 ஆம் தேதி தந்தேராஸ் ஆகும், மேலும் புதிய அறிமுகங்கள் செய்ய இந்த நாள் மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது, அதனை தொடர்ந்து நவம்பர் 3 மற்றும் நவம்பர் 4 தீபாவளி நாட்கள் ஆகும்.

இந்நாள் வரை மறைக்கப்படும் ஜியோ போன் நெக்ஸ்ட் அம்சங்கள்?

விற்பனை தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட, ஜியோ போன் நெக்ஸ்ட்டின் ஸ்க்ரீன் சைஸ் மற்றும் ரெசல்யூஷன், ப்ராசஸர், ஸ்டோரேஜ் விருப்பங்கள், கேமராக்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் அம்சங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது?

ரிலையன்ஸ் ஜியோபோன் நெக்ஸ்ட் ஆனது கூகுளின் ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தில் இயங்கும் மற்றும் கூகுள் பிளே ஸ்டோருக்கான ஆதரவுடன் வரும், அதாவது பயனர்கள் ஆண்ட்ராய்டு ஆப்களை பதிவிறக்கம் செய்யலாம்.

ஜியோபோன் நெக்ஸ்ட் உள்ளமைக்கப்பட்ட கூகுள் அசிஸ்டென்ட்டையும் பேக் செய்யும், இதன் வழியாக பயனர்கள் கூகுளின் குரல் அடிப்படையிலான ஏஐ அசிஸ்டென்ட்டைப் பயன்படுத்த முடியும்.

ஸ்மார்ட்போனின் முன்புறத்திலும் பின்புறத்திலும் கேமரா இருக்கும். பயனர்கள் ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனில் தங்கள் மொழியில் உள்ள கன்டென்டை உரக்கப் படிக்கும் “மொழிபெயர்ப்பு” அம்சத்துடன் இது வரும்.

ஜியோபோன் நெக்ஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக வருமா?

இல்லை! ஜியோபோன் நெக்ஸ்ட் ஒரு 5ஜி போன் அல்ல. இது 4G VoLTE நெட்வொர்க்கில் வேலை செய்யும்.

என்ன விலைக்கு வரும்?

ஜியோ நிறுவனம் விலை பற்றி எதையுமே பேசவில்லை. ஆனால் இது மிக மிக மலிவான 4ஜி ஸ்மார்ட்போனாக வரும் என்று உறுதியளித்துள்ளது. இதுவரை வெளியான லீக்ஸ் தகவல்களின் வழியாக, ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.3,499 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.