தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்; 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டம்

நாட்டில், கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் இருந்தாலும், இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. அதிலும், தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேராளவில், தொற்று பதிப்பு 30,000 என்ற நிலையிலே இருந்து வருகிறது. 

நாட்டின் மொத்த பாதிப்பில் பெரும்பாலான தொற்று பாதிப்புகள் கேரளாவில் தான் பதிவாகின்றன. இந்நிலையில், மூன்றாம் அலை குறித்த அச்சமும் உள்ளதால், மத்திய அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரபடுத்தி, கொரோனா பரவல் (Coronavirus) அதிகமாகாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில், நாளை தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் என மக்கள் வசதிக்கேற்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசி வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்எனவும் அரசு தெரிவித்துள்ளது.

ALSO READ: வேகமெடுக்கும் கொரோனா பரவல்: எச்சரிக்கும் சுகாதாரத் துறை

மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசிகள் போட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த வசதியை பயன்படுத்திக் கொண்டு, 18 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள் இந்த முகாம்­க­ளைப் பயன்­ப­டுத்­தித் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று சுகா­தா­ரத்­துறை செய­லா­ளர் டாக்­டர் ராதா­கி­ருஷ்­ணன் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 1,631 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,30,592 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 186 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

ALSO READ: 1 கோடி டோஸ் கூடுதல் தடுப்பூசிகள் தேவை: மத்திய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.