திருப்பத்தூரில் சோகம்; பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த விரக்தியில் தந்தை தற்கொலை..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை அருகே இருக்கும் கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன். இவர், சென்னையில் இருக்கும் ஐஸ்கிரீம் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் இருவருக்கும் ஜஸ்வந்த் என்ற 8 வயது மகனும், ஹரிபிரிதா என்ற 6 வயது மகளும் உள்ளனர்.

இவர்கள் இருவரும் கல்லூர் கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில் பயின்று வந்த நிலையில், மீனாட்சியின் தாயார் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை அடுத்திருக்கும் கடாம்பூரில் வசித்து வந்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தினை முன்னிட்டு மீனாட்சி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தாயாரின் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று காலை நேரத்தில் லோகேஸ்வரன் தனது 2 குழந்தைகளுடன் கைலாச கிரி மலைக்கு சென்று இருக்கிறார்.

குழந்தை

அங்கிருந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், குழந்தைகள் இருவரும் நீரில் தவறி விழுந்துள்ளார். குழந்தைகள் இருவருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தால் தத்தளிக்கவே, லோகேஸ்வரன் அவர்களை காப்பாற்ற முயற்சித்தும் பலனில்லை.

குழந்தைகள் இரண்டு பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகவே, இதுகுறித்து தகவல் அறிந்த உமாபாரத் காவல்துறையினர் குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இன்று காலை மருத்துவமனையில் இருந்த லோகேஸ்வரன் திடீரென பூச்சி மருந்தை உட்கொண்டார். அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். பிள்ளைகள் இறந்த துக்கத்தில் தந்தையும் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.