நாளை நீட் தேர்வு… நாளை மறுநாள் பேரவையில் தீர்மானம்!!

நீட் தேர்வுக்கு எதிராக பேரவையில் நாளை மறுநாள் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த திமுக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்திருந்தது.

திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் வாக்குறுதி குறித்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக அரசு விரும்பாத, முதல்வர் மனதுக்கு ஒப்புதல் இல்லாத நிலையிலேயே நீட் தேர்வு நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.

Ma Subramanian

மேலும் தமிழக சட்டப்பேரவையின் இறுதி நாளான செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். எனத் தெரிவித்துள்ளார்.

நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு நாளை மறுநாள் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.