பட்ஜெட் விலையில் சைலன்ட் ஆக அறிமுகமான Airtel-இன் புதிய 4G டேட்டா ரீசார்ஜ்!

ஹைலைட்ஸ்:

புதிய ஏர்டெல் ரீசார்ஜ் அறிமுகம்
இது டேட்டா பிளான் என்றாலும் கூடுதல் நன்மையுடன் வருகிறது
என்ன விலை, என்னென்ன நன்மைகள், இதற்கு மாற்று பிளான்கள் உள்ளதா?

பாரதி ஏர்டெல் நிறுவனம் – சத்தம் போடாமல் – அதன் பயனர்களுக்கு ஒரு புதிய மலிவு விலை 4ஜி டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

2 மலிவான ஜியோ போன் ரீசார்ஜ்கள் திடீர் நிறுத்தம்; பயனர்கள் ஷாக்!

இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.119 ஆகும். இது ஏற்கனவே ஏர்டெல் நிறுவனத்தின் இணையதளம் வழியாக அணுக கிடைக்கிறது என்பதால், இதை நீங்கள் இப்போதே ரீசார்ஜ் செய்யலாம்.

Jio-வின் இந்த 1095GB டேட்டா பிளானுக்கு போட்டி.. “கடல்லயே” இல்லயாம்!

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய ரீசார்ஜ் வழியாக பயனர்கள் 15 ஜிபி அளவிலான டேட்டாவைப் பெறுவார்கள். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் பயனர்களின் ஆக்டிவ் அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஒற்றுப்போகும்.

சுவாரசியமாக இது வெறுமனே ஒரு டேட்டா ஒன்லி பிளான் கிடையாது. அதாவது ரூ.119 திட்டத்துடன் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் ‘எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக்’ நன்மையையும் அணுக கிடைக்கும்.

ரூ.119 திட்டத்திற்கு சரியான மாற்றாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஏர்டெல் 4ஜி டேட்டா பேக்குகள்:

பாரதி ஏர்டெல்லில் இருந்து ஒரு 4ஜி டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை பெறுவதற்கு நீங்கள் ரூ.119 செலவழிக்க விரும்பவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், நீங்கள் தேர்வு செய்யக்கூடிய பல திட்டங்கள் ஏர்டெல் நிறுவனத்திடம் உள்ளன.

அதில் ஒன்று ரூ.98 வவுச்சர் ஆகும். இந்தத் திட்டம் 12 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது மற்றும் இதன் செல்லுபடியாகும் காலம் பயனரின் தற்போதைய அன்லிமிடெட் ரீசாஜ் பேக் உடன் ஒற்றுப்போகும். ஆனால் இது ரூ.119 ரீசார்ஜை போல எந்த விதமான கூடுதல் சலுகைகளையும் வழங்காது.

அடுத்ததாக ஏர்டெல் பயனர்கள் ரூ.89 பேக்கை ரீசார்ஜ் செய்யலாம். இது ரூ.119 திட்டத்தை விட ரூ.30 மலிவானது. இருப்பினும், இந்த திட்டம் 6 ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்குகிறது, மேலும் அதன் செல்லுபடியாகும் காலம் பயனரின் தற்போதைய ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஒற்றுப்போகும்.

இந்தத் திட்டம் குறைவான டேட்டா நன்மையுடன் அனுப்பப்பட்டாலும், பயனர்களுக்கு பல கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.

அதாவது ஏர்டெல் ரூ.89 பேக் வழியாக பயனர்கள் அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் பதிப்பின் 28 நாட்கள் இலவச சோதனை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.தவிர ரூ.89 பயனர்கள் Hellotunes மற்றும் Wynk Music-இன் இலவசப் பயனைப் பெறுவார்கள்.

இதற்கும் கீழ் செல்ல வேண்டும் என்றால், பாரதி ஏர்டெல் வழங்கும் மிகவும் மலிவான 4ஜி டேட்டா வவுச்சர் – ரூ.48 இருக்கிறது.

இது 3 ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்குகிறது, அதாவது ஒவ்வொரு ஜிபி டேட்டாவும் ரூ.16 என்கிற மதிப்புடையதாக உள்ளார். இது மற்ற ஆபரேட்டர்கள் தங்கள் வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்களுடன் வழங்குவதை விட மிகவும் விலை உயர்ந்தது ஆகும்.

மேலும் ரூ.48-க்கு எந்த தனிச்சிறப்பும் இல்லை. மேலும் வழக்கம் போல இதன் செல்லுபடியாகும் காலம் பயனர் ஏற்கனவே ரீசார்ஜ் செய்துள்ள வரம்பற்ற திட்டத்துடன் ஒற்றுப்போகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.