பிரபல சீரியல் நடிகர் திடீர் தற்கொலை..! என்ன காரணம்? அதிர்ச்சியில் உறைந்த பிரபலங்கள்!!

மலையாத டிவி தொடர்களில் நடித்து பிரபலமான ரமேஷ் வலியசாலா என்கிற நடிகர் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து தற்போது போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

மலையாள தொலைக்காட்சிகளில் கடந்த 22 வருடமாக ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமானவர் ரமேஷ் வலியசாலா. 54 வயதாகும் இவர் இன்று (செப்டம்பர் 11 ஆம் தேதி ) மர்மமான முறையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இவரது மரணம் இயற்க்கைக்கு மாறாக உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதால் போலீசார் இவரது மரணம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

malayalam serial actor ramesh valiyasala suicide

மேலும், கொரோனா கால கட்டங்களில் ரமேஷ் நிறைய நிதி பிரச்சனைகளுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. எனினும் தற்போது அவரில் இருந்து மீண்டும் வரும் விதமாக, அடுத்தடுத்து சீரியல் வாய்ப்புகள் மட்டும் இல்லாமல் சில படங்களிலும் இவர் நடித்து வந்த நிலையில், திடீர் என இப்படி ஒரு முடிவை அவர் எடுக்க காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

malayalam serial actor ramesh valiyasala suicide

ஒரு மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை துவங்கி, மெல்ல மெல்ல திறமைகளை வளர்த்து கொண்டு, சீரியலை கடந்து சினிமா நடிகராகவும் மாறிய இவரது மரணம், மலையாள திரையுலகை சேர்ந்த பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 

  • serial actor death
  • malayalam serial actor
  • ramesh valiyasala
  • suicide

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.