மாதம் ரூ.1 லட்சம் பென்ஷன் வேண்டும்.. அரசின் எந்த திட்டத்தில் கிடைக்கும்.. எவ்வளவு முதலீடு..?

அஞ்சலகத்தின் தேசிய ஓய்வூதிய திட்டம் பற்றி நாம் பலமுறை பார்த்திருக்கிறோம், படித்திருக்கலாம். இது ஒரு தன்னார்வ பங்களிப்பு திட்டமாகும். இதன் மூலம் உங்களது ஒய்வுகாலத்திற்கு தேவையான வருமானத்தினையும் பெற முடியும்.

அதிலும் தனியார் துறையில் வேலை செய்யும் பலரும், சுய தொழில் செய்யும் பலரும் நினைப்பது, தங்களது ஓய்வுகாலத்தில் பென்ஷன் இல்லையே என்பது தான். அந்த கவலையை போக்கும் விதமாக மத்திய அரசு அஞ்சலகம் மூலம் பல திட்டங்களை வழங்கி வருகின்றது.

அப்படியான திட்டங்களில், சிறந்த ஓய்வூதிய திட்டம் பற்றித் தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம். அது தேசிய ஓய்வூதிய திட்டம் தான். இந்த ஓய்வூதிய திட்டத்தின் மூலம், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காகவும், தனியார் துறையில் பணிபுரிபவர்கள் என பல தரப்பினரும் பயன் பெறுவர்.

மிகச் சிறந்த 4 கில்ட் ஃபண்ட்கள்.. யாரெல்லாம் முதலீடு செய்யலாம்..!

அவசியமான ஒன்று

அவசியமான ஒன்று

பொதுவாக பல முதலீட்டு திட்டங்கள் முதலீடு செய்ய இருந்தாலும், ஓய்வுகால முதலீடு எனும் போதும், நாம் பலமுறை யோசித்து செய்ய வேண்டும். ஏனெனில் வயதான காலத்தில் நிதி நெருக்கடியை எதிர்கொள்வது மிக கடினமான ஒன்று. ஆக அப்படியான கடினமான விஷயங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் தான் இந்த என்பிஎஸ்.

எப்போது தொடங்கப்பட்டது?

எப்போது தொடங்கப்பட்டது?

இந்த திட்டத்தினை 2004ம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டது. ஆனால் இது பின்னர் 2009க்கு பிறகு தனியார் ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இல்லதரசிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இந்த திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பாதுகாப்பு அளிக்கும் புதிய விதிகள்
 

பாதுகாப்பு அளிக்கும் புதிய விதிகள்

இந்த என்பிஎஸ் திட்டத்தில் சமீபத்தில் அரசு பல புதிய மாற்றங்களை செய்தது. அவற்றியில் முக்கியமானது எஸ்பிஎஸ் சந்தாதாரர் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே முழு கார்பஸினையும் பெற முடியும். இதற்கு முன்னர் பென்ஷனை முழுவதும் ஒரே நேரத்தில் பெற முடியாது. இதில் 60% மட்டுமே திரும்ப பெற முடியும். 40% நீங்கள் வருடாந்திர திட்டத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம் மாத மாதம் உங்களுக்கு ஒரு வருமானமாக கிடைக்கும்.

வரிச்சலுகையும் கிடைக்கும்

வரிச்சலுகையும் கிடைக்கும்

அரசின் ஒந்த ஓய்வூதிய திட்டத்தில் வரிச்சலுகையும் கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்போது, முன்பு பணவீக்கம் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய 1000 ரூபாய் என்பது 30 ஆண்டுகள் கழித்து எவ்வளவாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு, எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ரூ.1 லட்சம் எப்படி சாத்தியம்

ரூ.1 லட்சம் எப்படி சாத்தியம்

உதாரணத்திற்கு 30 வயதான ஒருவர் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்து, அவருக்கு, 60 வயதாகும்போது, 1 லட்சம் பென்ஷன் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று இங்கு பார்ப்போம்.

என்பிஎஸ் திட்டத்தில் மாதம் 17,000 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம், 30 ஆண்டுகளுக்கு பிறகு, 61,20,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். இதன் மூலம் முதிர்வு தொகை 3,87,48,531 ரூபாயாகும். இதில் நீங்கள் ஓய்வுக்காக 50% வைத்துக் கொண்டால் கூட, உங்களால், இதன் மூலம் மாதம் சுமார் (annuity rate 7% என வைத்துக் கொண்டால்) 1,13,017 லட்சம் ரூபாய் பென்ஷனாக பெற முடியும்.

மாதம் 1000 ரூபாய்

மாதம் 1000 ரூபாய்

இதே 30 ஆண்டுகாலத்திற்கு மாதம் 1000 ரூபாய் செலுத்திருந்தீர்கள் என்றாலும் கூட, உங்களுக்கு மாதம் ஓய்வூதிய தொகையாக மாதம் 5,698 ரூபாய் கிடைக்கும். நீங்கள் மொத்தம் 3,60,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். இதன் மூலம் உங்களது மொத்த கார்ப்பஸ் 22,79,326 ரூபாயாகும். இதிலும் 50% வருடாந்திர திட்டத்தில் (annuity rate 7%) வைத்துக் கொண்டால் இந்த தொகை ஓய்வூதியமாக கிடைக்கும்.

என்ன ஆவணங்கள் தேவை?

என்ன ஆவணங்கள் தேவை?

பொதுவாக எந்தவொரு சேமிப்பு திட்டங்களிலும் இணைய தேவைப்படும் ஆவணங்கள் தான் இந்த திட்டத்திலும் தேவை. குறிப்பாக முகவரிச் சான்று, அடையாளச் சான்றிதழ், பிறந்த தேதிக்கான சரியான ஆவணம் உளளிட்டவை தேவைப்படும். இந்த ஆவணங்களை முன்னிலை முனையம் என்று அழைக்கப்படும் POPs கொடுத்து இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

TIER-1 – எவ்வளவு குறைந்தபட்சம் செலுத்தலாம்?

TIER-1 – எவ்வளவு குறைந்தபட்சம் செலுத்தலாம்?

இந்த ஓய்வூதிய திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர், கணக்கு முடிவு பெறும் வரையில் அல்லது ஒய்வு பெறும் வரையில் நிதியினை திரும்ப பெற முடியாது. எனினும் இந்த தேசிய ஓய்வூதிய திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளியேறும் போது மட்டுமே, இக்கணக்கினை முடித்து கொள்ளலாம். இதில் குறைந்தபட்சம் 6000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அவ்வாறு செலுத்தாவிடில் இந்த கணக்கு முடக்கப்படும்.

TIER-2 – எவ்வளவு குறைந்தபட்சம் செலுத்தலாம்?

TIER-2 – எவ்வளவு குறைந்தபட்சம் செலுத்தலாம்?

இந்த இரண்டாவது ஒய்வூதிய திட்டத்தில் சேருபவர்கள், இந்த திட்டத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் செலுத்திய பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கணக்கினை முதல் வகையான கணக்கிற்கான கூடுதல் இணைப்புக் கணக்காகவும் எடுத்து கொள்ளலாம். சந்தாதாரர் டயர் 1ல் கணக்கு தொடங்கியிருந்தால் மட்டுமே, டயர் 2ல் கணக்கு திறக்க முடியும்.

வயது அதிகரிப்பு

வயது அதிகரிப்பு

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் நுழைய குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்ச வயது 65 வயதாக இருந்த நிலையில், 70 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் முதிர்வு வயதும் 75 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு அரசின் இந்த திட்டத்தில் பல வரி சலுகைகளும் உள்ளதால், முதிர்வு காலத்திற்கு ஏற்ற ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

இதனையும் கொஞ்சம் கவனிங்க

இதனையும் கொஞ்சம் கவனிங்க

ஓய்வூதிய திட்ட முதலீட்டிலிருந்து ஒரு பகுதியை அவசரகால நிதியாக பெறுவது சாத்தியம் என்றாலும், ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து, மூன்றாண்டுகள் கழித்தே அவசரகால நிதியை பெறமுடியும். ஓய்வூதிய திட்டத்தில் முதிர்வு காலம் வரும் முன்னர், 3 முறை மட்டுமே அவசர கால நிதியை பெற முடியும். ஒவ்வொரு அவசரகால பெறுதல்களுக்கும் இடையில், குறைந்தது ஐந்தாண்டுகள் இடைவெளி அவசியமாகிறது. ஆனால், திவீர மருத்துவ தேவைகளுக்கு இந்த விதி பொருந்தாது.

எதில்? எவ்வளவு?

எதில்? எவ்வளவு?

இந்த திட்டத்தில் உள்ள மற்றொரு சிறப்பம்சமே, இந்த திட்டத்தில் எதில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம் என்பது தான். வழக்கமாக 75% வரையில் ஈக்விட்டியில் முதலீடு செய்யலாம். இதனால் இந்த திட்டமானது அரசின் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் இபிஎஃப்பினை சற்று வருவாய் அதிகம் பெற வாய்ப்புகள் அதிகம்.

முன்னதாக திட்டமிடுங்கள்

முன்னதாக திட்டமிடுங்கள்

ஆக நீங்கள் இளம் வயதிலேயே சேமிக்க தொடங்கினால், ஓய்வுகாலத்தில் பெரும் தொகையை பெற முடியும். இதே உங்கள் வயதின் அடிப்படையில் இந்த தொகைகள் மாறுபடலாம். ஆக முடிந்த மட்டில் முன்னதாக திட்டமிட்டால், ஓய்வுகாலத்தில் அதிகளவு பென்ஷனும் பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

NPS Scheme: how can i get Rs.1 lakh monthly pension? which one is best for investment for retirement?

NPS latest updates.. How can i get Rs.1.25 lakh monthly pension? Which one is best for investment for retirement?

Story first published: Saturday, September 11, 2021, 17:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.