ராஜினாமா செய்தது ஏன்? குஜராத்தின் அடுத்த முதல்வர் யார்? வெளியான பரபரப்பு தகவல்.!

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குஜராத் மாநில ஆளுநர் ஆசார்யா தேவ்ராத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் விஜய் ரூபானி வழங்கியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், “என் மீது நம்பிக்கை வைத்து முதல்வராக பணிபுரிய வாய்ப்பு கொடுத்த பாஜக தலைவர்களுக்கு நான் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். முதல்வர் பதவி மாற்றம் என்பது பாஜகவுக்கு புதிது கிடையாது.” என்று தெரிவித்துள்ளார். 

வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை கருத்தில் கொண்டு தற்போது மாநில முதலமைச்சர் விஜய் ரூபாய் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அவர் ராஜினாமா செய்வதற்கான காரணம் குறித்த தகவல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. குஜராத் மாநில பாஜகவின் உட்கட்சி பூசல் நடந்ததாக இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. அப்படியிருக்க முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது தேசிய அரசில், அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள காரணத்தினால், அம்மாநிலத்தில் புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பார்கள் அல்லது தேர்தல் வரும்வரை இவரே முதலமைச்சராக இருக்கும்படி ஆளுநர் பரிந்துரைப்பார் என்பது குறித்த விவரங்கள் இனிமேல் தான் வரும்.

இதற்கிடையே வெளியான முக்கிய தகவலின் படி, பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் தற்போது குஜராத்தில் முகாமிட்டிருப்பதால் விரைவில் புதிய முதல்வர் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என்று அந்த தகவல் தெரிவித்துள்ளது.


விஜய் ருபானி பற்றி சிறு குறிப்பு: 
1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி, பர்மாவின் ரங்கூனில் பணியா சமூகத்தில் விஜய் ருபானி பிறந்தார். பர்மாவில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக இவர் குடும்பம் பர்மாவிலிருந்து ராஜ்கோட் இடம்பெயர்ந்தது. இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் ஆவார். 
இவர் மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபட தொடங்கினர். 1971 ஆம் அப்போதைய பாரதிய ஜனதாவான ஜனசங்கத்தில் இந்தார். இளங்கலைப் பட்டத்தை தர்மேந்தர் சிங் கலைக்கல்லூரியில் முடித்து, சவுராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார்
நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அறிவித்தபோது மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 1987 ராஜ்கோட் நகராட்சிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 1996 ஆம் ராஜ்கோட்டிற்கு மேயர் ஆனார். 2006 இல் இவர் குஜராத்தின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்டார். 
2006 முதல் 2011 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். ஆனந்திபென் அமைச்சரவையில் 2015 நவம்பரில் அமைச்சரான ருபானி பதவியேற்ற ஐந்து மாதங்களில் குஜராத் மாநில பாஜக தலைவராக ஆனார். 2016 ஆகஸ்ட் 7 முதல் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து வந்தார். இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.