ரியல்மி 9 வரும்னு ரியல்மி 8 சீரீஸ் வாங்காம வெயிட் பண்றீங்களா? ஐயோ பாவம்!

ஹைலைட்ஸ்:

ரியல்மி 8 சீரீஸ் வாங்காமல் காலம் ஓட்டுவது வீண்
ஏனெனில் ரியல்மி 9 சீரீஸ் வர மிகவும் தாமதம் ஆகும்
அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்று ரியல்மி அறிவிப்பு

ரியல்மி நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய Realme 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் அதன் முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

Itel Vision 2S: 5000mAh பேட்டரி, 6.52-இன்ச் டிஸ்பிளேவுடன் வெறும் ரூ.6999-க்கு இப்படி ஒரு Phone-ஆ!

இப்போது இந்நிறுவனம் அதன் வரவிருக்கும்
ரியல்மி 9
தொடர் ஸ்மார்ட்போன்கள் பற்றிய சில விவரங்களை வெளியிட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் Realme 8i, Realme 8s 5G அறிமுகம்; செப்.13 முதல் SALE!

வெளியான தகவலின்படி, ரியல்மி 9 மாடல்கள் அடுத்த ஆண்டு தான் இந்தியாவுக்கு வரும் என்பதை ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு முக்கிய ப்ராசஸர் உடன் வரும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியது.

ரியல்மீ 9 சீரிஸும்
ரியல்மி 8
சீரிஸைப் போலவே பல மாடல்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் 8 சீரீஸ் மாடல்களை வாங்காமல் 9 சீரீஸ் மாடலை வாங்கலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு இருந்தால், கிட்டத்தட்ட 4 மாதங்கள் நீங்கள் காத்திருக்க நேரிடலாம் என்பதை நினைவில் கொள்க.

Realme 8s மற்றும் 8i ஸ்மார்ட்போன்களின் மெய்நிகர் வெளியீட்டு நிகழ்வின் போது, நிறுவனம் Realme 9-ஐ இந்தியாவில் 2022 இல் அறிமுகம் செய்வதாகக் கூறியது.

இந்த ஸ்மார்ட்போன் புதிய மற்றும் சக்திவாய்ந்த ப்ராசஸர் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் உடன் வருமா அல்லது மீடியாடெக் ப்ராசஸர் உடன் வருமா என்பதை ரியல்மி உறுதிப்படுத்தவில்லை.

ரியல்மி நிறுவனம் ரெட்மி நோட் 9 தொடரைப் பின்பற்றத் திட்டமிட்டுள்ளதாகவும், எனவே வரவிருக்கும் மாடல்களுக்கு ரியல்மி 9, ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ஏ என்கிற பெயர்கள் சூட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரபல டிப்ஸ்டர் முகுல் சர்மா பரிந்துரைத்துள்ளார்.

இது தவிர வரவிருக்கும் ஸ்மார்ட்போன் பற்றிய வேறு எந்த தகவலும் இப்போது இல்லை.

இதற்கிடையில், ரியல்மே பேட் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இந்திய ஆண்ட்ராய்டு டேப்லெட் பிரிவிற்குள் ரியல்மி தனது காலடியை எடுத்து வைத்தது.

இந்த ஆண்ட்ராய்டு டேப்லெட் ரூ.13,999 என்கிற ஆரம்ப விலையில் வருகிறது, இது ஆன்லைனில் Flipkart மற்றும் Realme.com வழியாக வருகிற செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும்.

ரியல்மி பேட் ஆனது 10.1-இன்ச் WUXGA+ டிஸ்ப்ளே, 2000×1200 பிக்சல் ரெசல்யூஷன், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 ப்ராசஸர், ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ், 8 எம்பி முன் மற்றும் பின் பக்க கேமரா போன்ற பிரதான அம்சங்களை பேக் செய்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.