ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரும் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்!

ஹைலைட்ஸ்:

பட்ஜெட் விலையில் பல ஒன்பிளஸ் மாடல்கள் வருகிறது
அவைகள் நோர்ட் சீரீஸின் கீழ் வெளியாகலாம்
அனைத்துமே ரூ.20000 க்குள் என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம்

சமீப காலமாக ஒன்பிளஸ் நிறுவனம் கிட்டத்தட்ட அதன் மொத்த நேரத்தையும் ஆற்றலையும் நோர்ட் சீரீஸின் கீழ் செலவழித்து வருகிறது.

ஐபோன் 13 வெளியீட்டு தேதி அறிவிப்பு! அதே Apple Event-இல் வேறு என்னென்ன எதிர்பார்க்கலாம்?

இந்த பிராண்ட் உலகம் முழுவதும் பல நோர்ட்-சீரிஸ் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அவற்றில் மூன்று இந்தியாவிற்கு வந்தன. அவைகள் OnePlus Nord, Nord CE 5G மற்றும் Nord 2 மாடல்கள் ஆகும். இவை அனைத்துமே ரூ.30,000 க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்ளோ கம்மி விலைக்கு “செல்பீ” கேமராவுடன் இப்படி ஒரு 55-இன்ச் 4K QLED ஸ்மார்ட் TV-ஆ!

ஆனால் இப்போது ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ.20,000 க்கும் குறைவான விலையில் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து ரூ.20கே பட்ஜெட் பிரிவை அசைத்து பார்க்க விரும்புவது போல்

தெரிகிறது.

இந்த பிராண்ட் இதே பட்ஜெட் பிரிவிற்குள், ஒன்பிளஸ் எக்ஸுடன் நுழைய முயன்றது. துரதிருஷ்டவசமாக, ஒன்பிளஸ் எக்ஸ் சந்தையில் ஒரு சரிவை ஏற்படுத்தத் தவறியது, அதனால் ஒன்பிளஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொடரை முற்றிலுமாக நிறுத்தியது.

இப்போது இந்த பிராண்ட் மீண்டும் ரூ.20,000 பிரிவில் ஒரு மலிவு விலை ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுடன் நுழையும் என்று தெரிகிறது, இம்முறை அது நோர்ட் தொடரின்கீழ் வெற்றி அடையலாம்.

ரூ.20,000 பட்ஜெட்டின் கீழ் வரும் ஒன்பிளஸ் போன்கள் எப்போது அறிமுகமாகும்?

டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் அதன் அறிமுக காலவரிசை உத்தியில் “ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறது” மற்றும் இந்தியாவில் ரூ.20,000 க்கு கீழ் சில ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

சரியான வெளியீட்டு தேதி தெரியவில்லை என்றாலும், ரூ.20,000 க்கு கீழ் உள்ள ஒன்பிளஸ் போன்கள் அடுத்த காலாண்டில் அதாவது அக்டோபர் முதல் டிசம்பருக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று டிப்ஸ்டர் கூறுகிறார்.

அடுத்த காலாண்டு இல்லையென்றால், Q2 2022-க்குள் நிச்சயமாக மலிவான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களைப் பார்க்கலாம்.

துரதிருஷ்டவசமாக, வரவிருக்கும் ரூ.20,000 பட்ஜெட் விலையிலான ஒன்பிளஸ் போன் என்ன வழங்குகிறது என்று எங்களுக்குத் தெரியாது.

ஏனெனில் மலிவு விலையில் வரும் புதிய ஒன்பிளஸ் நோர்ட் போன் குறித்து சமீபத்திய லீக்ஸ் அல்லது வதந்திகள் எதுவுமே கிடையாது.

இந்நிறுவனம் ஏற்கனவே அதன் OnePlus Nord N200 5G-ஐ ரூ .20,000 க்கு கீழ் வழங்குகிறது, ஆனால் இந்த மாடல் அமெரிக்க சந்தைக்கு பிரத்தியேகமானது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வர வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இருப்பினும், அதன் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்தியாவில் தொடங்கப்படலாம்.

உங்களுக்குத் தெரிந்தபடி, ஒப்போ நிறுவனம் ரூ.20,000 க்குள் பல ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கிறது மற்றும் இந்த பிராண்ட் இப்போது ஒன்பிளஸுடன் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் இணைக்கப்பட்டுள்ளது.

இரு பிராண்டுகளுக்கும் இடையிலான உறவு எவ்வளவு ஆழமாக செல்கிறது என்பதைப் பொறுத்து, எதிர்காலத்தில் சில மலிவு விலை OPPO ஸ்மார்ட்போன்கள் ஒன்பிளஸ் பிராண்டிங்கின் கீழ் தொடங்கப்படலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, OnePlus மற்றும் OPPO ஆகியவை ஏற்கனவே ColorOS கோட்பேஸை பகிரத் தொடங்கியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.