வெடித்து சிதறிய ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்: வழக்கறிஞர் கவுன் பாக்கெட்டில் இருந்துருக்கு- நடந்தது என்ன?

டெல்லியை சேர்ந்த வழக்கறிஞரின் கவுனில் ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனம் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வானது புதுடெல்லியில் உள்ள நீதிமன்ற அறை ஒன்றில் புதன்கிழமை நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பயனர் சம்பவத்தின் விவரங்களை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்து ஒன்பிளஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி தீப்பிடித்ததாக தொடரப்படும் இரண்டாவது வழக்கு இதுவாகும். முன்னதாக வெடித்த நிகழ்வு கடந்த மாதம் ஆன்லைனில் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஒன்பிளஸ் சாதனம் வெடித்து குறித்து டுவிட்டரில் பகிரப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது போன் வெடிப்பு சம்பவம் குறித்து கேட்ஜெட் 360 தளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் கவ்ரவ் குலாட்டி தனது அறையில் அமர்ந்திருந்த போது அவர் கவுனின் பாக்கெட்டில் இருந்த வெப்பம் வருவதை உணர்ந்திருக்கிறார். வெப்பம் உடலில் படுவதை உணர்ந்த போது தனது பாக்கெட்டில் இருந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனத்தை எடுத்து அதில் இருந்து புகை வருவதை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்

வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்

அதன்பின், தான் உடனடியாக கவுனை தூக்கி போட்டதாகவும், பின் தானும் தன் சகாக்களும் ஸ்மார்ட்போனின் அருகில் சென்றபோது, அது வெடித்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து முழு அறையும் புகையால் நிரம்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெடித்த சாதனத்தை குறிப்பிட்ட சில தினங்களுக்கு முன்புதான் பயன்படுத்த தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.

வெடித்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி

தற்போது வெடித்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனம் ஆகஸ்ட் 23, 2021 அன்று வாங்கப்பட்டது. தற்போது வெடித்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனத்தின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்களை பகிர்ந்துள்ளார். புதிய ஸ்மார்ட்போனை பயன்படுத்தி சில தினங்களே ஆனதாக கூறிய அவர் பழைய தொலைபேசியில் இருந்து தரவை கூட மாற்றவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

வெப்பம் வெளிவரத் தொடங்கிய சாதனம்

வெப்பம் வெளிவரத் தொடங்கிய சாதனம்

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி வெப்பம் வெளிவரத் தொடங்கிய போது பயன்பாட்டில் இல்லை எனவும் சார்ஜிங் நிலையில் கூடவில்லை என பகிர்ந்துள்ளார். தற்போது வரை அதிர்ச்சியில் இருக்கிறேன் எனவும் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து ஒன்பிளஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் அமேசான் நிர்வாகிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதாக கூறினார். இந்த சம்பவம் குறித்த புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து மைஸ்மார்ட் பிரைஸ் தளம் முதலில் பகிர்ந்தது.

6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ்

6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ்

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080×2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1200-AI SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் OxygenOS 11.3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டது. ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி சென்சார்

50எம்பி பிரைமரி சென்சார்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக 4 கே வீடியோக்கள், நைட்ஸ்கேப் அல்ட்ரா பயன்முறை, AI மேம்பாடுகள், போர்ட்ரெயிட் மோட், நைட் போர்ட்ரெயிட் மோட், டூயல் வியூ வீடியோ மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம். எனவே வெறும் 30 நிமிடங்களில் 0 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

டூயல் ஸ்பீக்கர்கள், ஹாப்டிக்ஸ் 2.0, இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக், 5ஜி, 4ஜி எல்டிஇ, என்எப்சி, ப்ளூடூத் வெர்ஷன் 5.2, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் கிரே சியரா, ப்ளூ ஹேஸ் மற்றும் க்ரீன் வூட் நிறங்களில் கிடைக்கிறது.

English summary
OnePlus Nord 2 5G Smartphone Explodes in Advocate’s chamber: Twitter User Share Pics

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.