வெள்ளநீரில் தள்ளாடும் விமானங்கள்? தலைநகரை புரட்டி எடுத்த கனமழை!

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த வெள்ளி அன்று ஒரேநாளில் 1,000 மில்லிமீட்டர் மழை பெய்து அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. ஒட்டுமொத்தமாக கடந்த 46 ஆண்டுகளில் பெய்யாத மிகக்
கனமழை
டெல்லியில் வெளுத்து வாங்கி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கனமழை காரணமாக டெல்லியின் மோதி பாக், ஆர்.கே.புரம், மது விகார், ஹரி நகர், ரோதக் ரோடு, பாதர்பூர், சோம் விகா, ரிங் ரோடு, பிரகலாத்பூர் அண்டர்பாஸ், முனிர்கா, ராஜ்பூர் குர்த், நாங்லோய், கிராரி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வெளுத்து வாங்கும் கனமழை

இதையடுத்து தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், டெல்லியில் இன்று (செப்டம்பர் 11) காலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த விஷயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறோம். எங்களது ஊழியர்கள் 24 மணி நேரமும் நிலைமையை கண்காணித்து பராமரிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

தத்தளிக்கும் விமானங்கள்?

தொடர் மழையால் டெல்லியில் உள்ள
இந்திரா காந்தி
சர்வதேச விமான நிலையத்தின் சில பகுதிகளில் (IGI) தண்ணீர் புகுந்தது. இதனால் ஏராளமான விமானங்கள் தண்ணீரில் தத்தளிப்பதை போன்ற சூழல் ஏற்பட்டது. இதையடுத்து மழைநீரை அகற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஏற்கனவே மோசமான வானிலை காரணமாக விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள
டெல்லி
விமான நிலைய அதிகாரிகள், விமான நிலையத்தில் சிறிது தண்ணீர் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டது.

வானிலை முன்னெச்சரிக்கை

எங்களது பராமரிப்புக் குழுவினர் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு பிரச்சினைகளை தீர்த்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்திய
வானிலை ஆய்வு மையம்
தனது ட்விட்டரில், டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக அதிக கனமழை வரை பெய்யக்கூடும். இது தேரா மந்தி, ஐஜிஐ விமான நிலையம்,
என்.சி.ஆர்
, பரிதாபாத், பல்லாப்கார், குருகிராம், ரோதக், கோஹனா ஆகிய பகுதிகளுக்கு பொருந்தும்.

மேலும் என்.சி.ஆர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கர்னால், அஸ்சாந்த், சபிடோன், பானிபட், சோனிபட், ஜிந்த், ஹன்சி, மேஹம், சார்கி தாத்ரி, கோசாலி, ரேவாரி, நூவா, ஜஜ்ஜார், கந்தலா, பரவுத், ஜட்டார் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் பரவலானது வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.