மனைவி சுட்ட தோசை கருகியதால் தகராறு; விரக்தியில் கணவன் தற்கொலை

கோவை சிங்காநல்லூர் எஸ் .ஐ .எஸ். எஸ் காலனி நாராயணசாமி நகரை சேர்ந்தவர் பழனி (வயது 52). இவர் கட்டிட தொழிலாளி ஆவார். இவருக்கு மாதவி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். 

இந்த நிலையில் பழனி நேற்று வீட்டில் (Coimbatore) சாப்பிடும்போது அவரது மனைவி தோசை சுட்டுக் கொண்டிருந்தார். அப்போது அதில் ஒரு தோசை கருகிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த பழனி, இதுகுறித்து மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். பின்னர், சிறுது நேரம் கழித்து பழனி தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். மேலும் தனது அங்கிருந்த மின்விசிறியில் வேட்டியை கட்டி தூக்கிட்டு தற்கொலை (Suicide) செய்து கொண்டார். 

ALSO READ | நடிகை தூக்கிட்டு தற்கொலை; வெளியான Shocking காரணம்

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர். மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக பழனி தனது குடும்ப தகராறில் நான்கு முறை இதேபோல தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. அப்போது அவர் காப்பாற்றப்பட்டு விட்டார். ஆனால் இம்முறை இந்த செயல் விபரீதத்தில் முடிந்தது.

தற்போது இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ALSO READ | WATCH: வைரலாக ஒரே வீடியோவில் அம்மாவுக்கும், தங்கைக்கும் லிப்லாக்….

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.