அமெரிக்காவில் டெல்டா வைரசால் ஏற்பட்டிருக்கும்  கொவிட் 19 அலை விரைவாக உச்சம் தொடும்

‘அமெரிக்காவில் டெல்டா வைரசால் ஏற்பட்டிருக்கும்  கொவிட் 19 அலை விரைவாக உச்சம் தொடும் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக Johns Hopkins Universityஅவசர மருத்துவத் துறையின் துணை பேராசிரியர் பக்தி ஹன்சோதி எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஏற்பட்ட கொவிட் 19  அலை முடிவடைந்திருப்பது சற்று நிம்மதியை அளிக்கிறது. ஆனால் தற்போது இந்தியாவை போன்றே அமெரிக்காவிலும் ஒரே மாதிரியான தொற்று நிலை தொடர்வதை காண முடிகிறது.

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 13ம் தேதி வரையிலான ஏழு நாட்களில், பாதிப்பு 1.72 ,இலட்சமாக பதிவாகியுள்ளது.

தினமும் 1,800 பேர் உயிரிழந்து வருகின்றனர். தீவிர தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 1 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் டெல்டா வைரசால் ஏற்பட்டிருக்கும் புதிய கொவிட் 19 அலை விரைவாக உச்சம் தொடும். மக்கள் கவனக்குறைவாகவோ அலட்சியமாகவோ இருக்க வேண்டாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.