ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் மீது டிரோன் தாக்குதல் நடத்த இந்தியாவின் உதவி கோரும் அமெரிக்கா Sep 15, 2021

ஆப்கன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரவாதிகள் மீது டரோன் உள்ளிட்டவை வாயிலாக தாக்குதல் நடத்த இந்தியாவின் விமானப்படைத் தளங்களை பயன்படுத்துவது பற்றி இந்திய அரசுடன் பேசி வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் ஆப்கன் விவகாரம் குறித்து பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சியை பிடித்த பிறகு அங்கு தாலிபன்களுக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா இந்தியாவில் இருந்து வான்வழி தாக்குதலை நடத்தும் வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது.

  ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வாபஸ் பெற்றுள்ள நிலையில் பழைய விமானப்படைத் தளங்களை பயன்படுத்த இயலாத நிலையில், இந்தியாவின் உதவியை அமெரிக்கா கோருவதாக கூறப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.