ஆப்பிள் ஐபோன்13ன் சிறப்பம்சங்கள் என்ன? விலை எவ்வளவு தெரியுமா?

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் தற்போது தனது புதிய தயாரிப்பான ‘ஐபோன்13’ ஸ்மார்ட்போனின் இந்திய விலையை அறிவித்துள்ளது.

ஆப்பிள் ‘ஐபோன்13’ ஸ்மார்ட்போன் செப்., 24ம் தேதி, அமெரிக்கா, இந்தியா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்திய விற்பனை விலையை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. ஐபோன்13 மினி ரூ.69,999 என்றும், ப்ரோ ரூ.1,19,000 என்றும், ப்ரோ மாக்ஸ் ரூ.1,29,000 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ஐபோன்13 சிறப்பம்சங்கள்

ஐபோன்12யை விட மேலும் முன்னகர்ந்து முக்கிய தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது ஐபோன்13. இதில், 6.1 மற்றும் 6.7 இன்ச் அளவுள்ள தொடுதிரை என, நான்கு மாறுபட்ட தொடுதிரை அளவுடன் வெளியாகிறது. மேலும், நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஏ 15 தொழில்நுட்பம்; 5எம்என் வேவ் லெந்த்; ஸ்னாப் ட்ராகன் எக்ஸ் 60 5ஜி மோடம்; லிடார் சென்சார்; நீண்ட நேர பேட்டரி வசதி ஆகியன உள்ளன.

மேலும், பிரத்யேகமாக, கோவிட் பெருந்தொற்றால் உலகம் முழுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. முகக் கவசம் அணிந்த ஒருவரின் முகம் மற்றொருவருக்கு முழுதாக தெரிவதில்லை. இந்நிலையில் முகக்கவசம் அணிந்திருந்தாலும் ‘முகத்தை அறியும்’ வசதியை ஆப்பிள் ‘ஐபோன்13’ ஸ்மார்ட்போனில் உள்ளது.

latest tamil news

கடவுச் சொல்லைப்போல ‘பேஸ் டிடெக்சன்’ எனப்படும் முகத்தை காட்டி உள் நுழைகிற வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இனி வரும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களிலும் இந்த முகக்கவசத்தை எடுக்காமல் முகத்தை அறிகிற ‘பேஸ் ஐடி’ இடம்பெறும் எனத் தெரிவித்து உள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.