ஆர்யா படத்தின் ஒட்டு மொத்த உரிமையையும் கைப்பற்றிய உதயநிதி!!

அரண்மனை 3 படம், ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகும் நிலையில், இந்த படத்தின் அனைத்து உரிமையையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே வெளியாகியுள்ள இந்த படத்தின் பாகங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, 3 ஆவது பாகமும் தயாராகியுள்ளது.

arya acting aranmanai movie release date announced

இதில், நடிகர் ஆர்யா கதாநாயகனாகவும், ராஷி கண்ணா கதாநாயகியாகவும் நடித்துள்ளார், மேலும் ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்டுடுகிறது. மேலும் யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.  இதை தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

arya acting aranmanai movie release date announced

அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலில். அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும், இன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான போது இயக்குனர் சுந்தர்.C, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, கலைஞர் தொலைக்காட்சி CFO S.கார்த்திகேயன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா, Benzz Media CEO R.மதன்குமார் ஆகியோர் இருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

arya acting aranmanai movie release date announced

அரண்மனை 3 அக்டோபர் 14 அன்று ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளார் சுந்தர்.Cதயாரிப்பு – Avni Cinemax, Benzz மீடியா, C.சத்யா இசையமைத்துள்ளார். U.K.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, பெனி ஆலிவர் படத்தொகுப்பு செய்துள்ளார். ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • arya
  • aranmanai
  • tamil cinema
  • kollywood
  • red jain movies

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.