இதுவும் கடந்து போகும்… பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை வெளியிட்ட எமோஷனல் வீடியோ!

|

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல திருப்பங்களுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை விஜே தீபிகா திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் அளித்துள்ள பேட்டியில் முகத்தில் பருக்கள் இருந்ததால் அந்த சீரியலை விட்டு நீக்கிவிட்டதாக கூறியுள்ளார். மேலும் , இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு எமோஷ்னலான ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் குடும்பம் பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்டவை அடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

கூட்டுக்குடும்பம்

கூட்டுக்குடும்பம்

மற்ற சீரியல்களை போல், வில்லி, எந்நேரமும் அழுகை, போலீஸ், கொலை, பழுவாங்குவது என்று இல்லாமல், சாதாரண ஒரு கூட்டு குடும்பம் எப்படி இருக்குமோ அதே போல் எதார்த்தமான கதையை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

வானத்தைப்போல, ஆனந்தம் , எங்கள் அண்ணன், போன்ற திரைப்படங்களை போல் இந்த சீரியல் முழுக்க, முழுக்க அண்ணன் தம்பிகளை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில், ஸ்டாலின், சுஜிதா, சரவண விக்ரம், ஹேமாராஜ், குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், சரவண விக்ரம், ஹேமா சதிஷ், காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனியே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

கோயிலில் திருமணம்

கோயிலில் திருமணம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மூர்த்தி – தனம், ஜீவா – மீனா, கதிர் – முல்லை என முதல் 3 பேரும் திருமணமாகி தங்கள் அம்மாவுடன் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். கடைசி தம்பி கண்ணன் உறவுக்கார பெண் ஐஸ்வர்யா காதலித்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார் கண்ணன் இதனால், அந்த குடும்பமே நிலைகுலைந்து போய், சோகத்தில் மூழ்கியது.

திடீரென மாற்றப்பட்டார்

திடீரென மாற்றப்பட்டார்

இதையடுத்து, மூர்த்தி கோவத்தின் எல்லைக்கே சென்று இனி நீ என் தம்பி இல்லை நான் அண்ணணும் இல்லை என்று, தலையில் தண்ணீர் ஊற்றி, தலை முழுகுகினார். கண்ணன் ஐஸ்வர்யா திருமணத்தை அடுத்து அவர்களை சுற்றியே கதை நகர்ந்து வந்தது. இந்நிலையில், கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவந்த நடிகை விஜே தீபிகா திடீரென மாற்றப்பட்டார். இதையடுத்து அவர் அளித்துள்ள பேட்டியில் முகத்தில் பருக்கள் இருந்ததால் அந்த சீரியலை விட்டு நீக்கிவிட்டதாக கூறியுள்ளார்.

என்னை மறந்துடாதீங்க

என்னை மறந்துடாதீங்க

இந்நிலையில், விஜே தீபிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதுவும் கடந்த போகும் என்ற பாடலை பதிவிட்டுள்ளார். மேலும் ஐஷூக்கு சப்போர்ட் பண்ண அனைவருக்கும் நன்றி, ஐஷூ கதாபாத்திரத்தில் நான் இல்லாமல் இருக்கலாம், ஆனால், ஐஷூ கதாபாத்திரம் பண்ண தீபிகா நான் எப்பவும் இருப்பேன் சோ என்னை மறந்துவிடாதீர்கள் என்று கூறியுள்ளார்.

அவருக்கு பதிலாக

அவருக்கு பதிலாக

தீபிகா இந்த தொடரில் இருந்து வெளியேறியதை அடுத்து, அவருக்கு பதிலாக கனா காணும் காலங்கள்,ஈரமான ரோஜாவே உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான சாய் காயத்ரி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

English summary
Pandian Stores actress Deepika Shared the emostional video on Instagram page.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.