இந்தியாவில் புதிதாக 100 விற்பனையகங்கள் திறக்கப்படும் – ஸியோமி

தொழில்நுட்பத்துறையில் தனக்கென தனி வாடிக்கையாளர்களைத் தக்கவைத்திருக்கும் ஸியோமி நிறுவனம் இந்தியாவில் மேலும் 100 புதிய விற்பனையகங்களைத் திறக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது.

இன்று (செப்-15) புதன்கிழமை இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட பின் , இந்தியாவின் பின் தங்கிய நகரங்களில் 100 புதிய விற்பனையகங்களை ஆரம்பித்து புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதே முக்கியம் என  ஸியோமி கருதுவதாக தெரிவித்தனர்.

இதையும் படிக்க | ஆப்பிள் ‘ஐபோன் 13’ ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிப்பு

மேலும் அந்நிறுவனத்தின் இந்திய செயல் அதிகாரி முரளி கிருஷ்ணன் ,’டைர் 5 மற்றும் 6-யைச் சேர்ந்த நகரங்களில் மேலும் 100 புதிய விற்பனையகங்கள் திறக்கப்பட உள்ளன. இவற்றில் ஸியோமியின் தயாரிப்புகள் கிடைக்கும்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கப்பட்ட ஸியோமி  விற்பனையகங்களின் எண்ணிக்கை தற்போது 3000-க்கும் அதிகமாக இருக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் கிட்டதட்ட 6000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக ஸியோமி நிறுவனத்தின் ப்ராண்டான ‘எம்ஐ’ லோகோ இனி சந்தைக்கு வருகிற பொருள்களில் இடம் பெறாது என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.