இனிமேல் இந்த 3 ஐபோன் மாடல்களையும் இந்தியாவில் வாங்க முடியாது; ஆனால்!

ஹைலைட்ஸ்:

இந்தியாவில் 3 ஐபோன் மாடல்கள் நிறுத்தம்
அதில் பட்ஜெட் விலை ஐபோன் எக்ஸ்ஆர் மாடலும் அடங்கும்
வழக்கம் போல புதிய ஐபோன் 13 சீரீஸ் அறிமுகமே இதற்கு காரணம்

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது, ஆனால் நீங்கள் அதை வாங்க இன்னமும் ஒரு வழி இருக்கிறது.

ஐபோன் 13 சீரிஸ் அறிமுகம்: மொத்தம் 4 மாடல்கள்; இதோ விலை விவரங்கள்!

புதிய ஐபோன் 13 மாடல்களின் அறிமுகத்துடன், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் 12 தொடரின் விலைகளை குறைத்துள்ளது.

அடுத்த Flipkart Sale-இல் எல்லாருமே ஐபோன் 12 வாங்கலாம்! ஆபர்கள் அறிவிப்பு!

விலைகுறைப்பு ஒருபக்கம் இருக்க, ஒரு புதிய ஐபோன் வரும்போதெல்லாம் ஆப்பிள் நிறுவனம் சில பழைய மாடல்களை அதன் சீரீஸில் இருந்து அகற்றவும் முனையும்.

அப்படியாக iPhone 12 Pro மற்றும் iPhone 12 Pro Max உடன் iPhone XR மாடலும் ஆப்பிள் நிறுவனத்தால் கைவிடப்பட்டுள்ளது.

அதாவது ஆப்பிளின் சீரீஸில் தற்போது iPhone SE, iPhone 11, iPhone 12, iPhone 12 mini மற்றும் iPhone 13 சீரீஸ் ஆகியவைகள் மட்டுமே உள்ளது.

இந்த ஐபோன்கள் ரூ.39,900 முதல் ரூ.1,79,900 வரை செல்கின்றன. இந்தியாவில் ஏன் ஐபோன் எக்ஸ்ஆர் பிரபலமானதற்கு காரணம் அதன் விலை மற்றும் பிராண்ட் வேல்யூவே ஆகும். தற்போது இந்த மாடல் அதிகாரபூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளது

இருந்தாலும் XR-ஐ இந்தியாவில் வாங்கலாம்! அதெப்படி?

ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஐபோன் எக்ஸ்ஆரை நிறுத்தியிருக்கலாம், ஆனால் நீங்கள் ஒரு மலிவான ஐபோன் மாடலை தேடுகிறீர்கள் என்றால் – இந்த ஐபோனை இப்போதும் கூட வாங்கலாம்.

ஆனால் நீங்கள் இனிமேல் அதிகாரப்பூர்வ ஆப்பிள் இந்தியா வலைத்தளத்திலிருந்து ஐபோன் எக்ஸ்ஆரை வாங்க முடியாது, ஆனால் இந்த மாடல் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் வாங்க கிடைக்கிறது.

மேலும் நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆப்பிள் சில்லறை கடைகளின் வழியாகவும் கூட நீங்கள் ஐபோன் எக்ஸ்ஆரை வாங்கலாம்.

பிளிப்கார்ட்டில், ஐபோன் எக்ஸ்ஆர் மாடலின் 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.42,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது ஐபோன் எஸ்இக்கு அடுத்ததாக மிகவும் மலிவான விலைக்கு விற்பனை ஆகும் ஐபோன் ஆகும்.

ஐபோன் 13 வந்துவிட்ட நேரத்தில் ஐபோன் XR-ஐ வாங்கலாமா?

அதிக பணம் செலவழிக்காமல் ஆப்பிள் ஈகோசிஸ்டமிற்குள் நுழைய விரும்புவோருக்கு ஐபோன் எக்ஸ்ஆர் இன்னுமும் – ஒரு சிறந்த நுழைவு நிலை ஐபோன் மாடல் ஆகும்.

இது A12 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் அது iOS 13 உடன் அனுப்பப்படுகிறது. ஐபோன் XR மாடல் iOS 15 உடன் இணக்கமானது, எனவே சாப்ட்வேர் சப்போர்ட் நீளும் வரை எந்த சிக்கலும் இருக்காது.

மேலும் ஐபோன் எக்ஸ்ஆர் நாட்ச் வடிவமைப்புடன் ஒரு எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அதாவது இது வடிவமைப்பில் ஐபோன் 11-ஐப் போன்றது.

இந்த இடத்தில் ஐபோன் எக்ஸ்ஆருக்கு இப்போது மூன்று வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இதன் செயல்திறன் ஐபோன் 11, ஐபோன் 12, ஐபோன் 13 அல்லது நுழைவு நிலை ஐபோன் எஸ்இ மாடலை விட சற்றே குறைவாகத்தான் இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.