ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்த டாடா குழுமம்

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது. நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு முயற்சி எடுத்து வரும் நிலையில் டாடா குழுமம் இந்த விருப்பத்தை தெரிவித்துள்ளது.
இந்த விற்பனைக்காக மத்திய அரசு பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தது. இதற்கிடையில் கடந்த ஆண்டு கொரோனா அச்சம் மற்றும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதன் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது ஏர் இந்தியா நிறுவனம்.
image
ஏர் இந்தியா நிறுவனம், ஏற்கெனவே விஸ்தாரா என்ற பெயரில் விமான சேவை நடத்தி வருகிறது. அப்படியிருக்கும்போது, விற்பனைக்குப்பிறகு ஏர் இந்தியா நிறுவனமும் விஸ்தாரா நிறுவனமும் இணைந்துதான் செயல்படுமா அல்லது தனித்தனியாக செயல்படுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. மேலும் ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கெனவே கடனில்தான் இருந்துவந்தது. அப்படியிருக்க, இந்த விற்பனையின்போது எவ்வளவு கடனை அரசு தள்ளுபடி செய்யும், ஏர் இந்தியா நிறுவனத்தை என்ன விலைக்கு அரசு விற்பனை செய்யப்போகிறது போன்றவையாவும் இனி வரும் நாள்களிலேயே தெரியவரும்.
இதையும் படிங்க… டாடா மோட்டார்ஸின் ‘டிகோர்’ எலெக்ட்ரிக் வாகனத்துக்கு தொடங்கிய முன்பதிவு
டாடா நிறுவனம் ஒருவேளை ஏர் இந்தியாவை வாங்கிவிட்டால், தற்போது ஏர் இந்தியாவின் பணியாளர்கள் ஊழியர்களாக இருப்போர் அனைவரின் வேலை தொடர்பான பாதுகாப்பும் உறுதிசெய்யப்படுமென நம்பப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.