“ஐந்து மகன்களையும் ராணுவத்தில் சேர்க்க ஆசைப்பட்டேன்!" – `வீரத்தாய்' விருதுபெற்ற சந்திரிகா தேவி

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரிகா தேவி (71). இவரின் கணவர் தனஞ்ஜெயன் நாயர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தத் தம்பதிக்கு ஐந்து மகன்கள். மூன்றாவது மகன் வனஜெயன், நான்காவது மகன் தவுகித்திரி ஜெயன் இருவரும் தற்போது ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்களும் நாட்டைக் காக்கும் ராணுவத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளதைப் பாராட்டும் வகையில், இந்திய ராணுவம் சார்பில் அந்தக் குடும்பத் தலைவியான சந்திரிகா தேவிக்கு `வீரத்தாய்’ விருது மற்றும் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் இரண்டுக்கு மேற்பட்டவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்தால் அந்தக் குடும்பத் தலைவியை டெல்லிக்கு அழைத்து `வீரத்தாய்’ விருது மற்றும் பதக்கம் வழங்குவது வழக்கம். தற்போது, கொரோனா காரணமாக  ராணுவ போர்டு அதிகாரி தன்ஸ்லால், சந்திரிகா தேவியின் வீட்டுக்கு நேரில் சென்று விருதை வழங்கி உள்ளார்.

விருது வழங்கிய ராணுவ அதிகாரி

Also Read: CA Final: தேசிய அளவில் தங்கை முதலிடம், அண்ணன் 18-வது இடம்; சாதனை படைத்த உடன்பிறப்புகள்!

இது குறித்து சந்திரிகா தேவி கூறுகையில், “ராணுவ வீரரான தனஞ்ஜெயன் நாயரை திருமணம் செய்ததில் நான் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். அன்றைய காலத்தில் பலரும் இந்திய ராணுவத்தில் சேர அச்சப்பட்டு வந்தனர். ராணுவத்தில் சேர பலர் தயங்கிய நிலையில் நாட்டுக்காகப் போராடத் துணிச்சலுடன் சென்றார் என் கணவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் இந்திய – பாகிஸ்தான் போரிலும், இந்தியா – சீனா போரிலும் கலந்து கொண்டார். ஓய்வு பெற்ற அவர், கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

எனக்கு ஐந்து மகன்கள். அதில் மூன்றாவது மகன் வனஜெயன் மற்றும் நான்காவது மகன் தவுகித்திரி ஜெயன் ஆகிய இரண்டு பேரும் ராணுவத்தில் இணைந்து நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். என் கணவரைப் போல மகன்களும் ராணுவத்தில் இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுக்கிறேன். ஐந்து மகன்களையும் நாட்டுக்காகப் போராட ராணுவத்தில் சேர்க்க ஆசைப்பட்டேன். மற்ற மூன்று மகன்களும் ராணுவத் தேர்வில் தேர்ச்சி அடையவில்லை. ஒரே குடும்பத்தில் 3 பேர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியதால் இந்திய ராணுவம் சார்பில் `வீரத்தாய்’ விருது வழங்கி கவுரவித்தனர். விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி வாழ்த்தியபோது

Also Read: 10,000 பெண் ஊழியர்கள்; உலகின் மாபெரும் `ஆல் விமன்’ தொழிற்சாலை தமிழகத்தில்! – ஓலா அறிவிப்பு

இதற்கிடையில் நாகர்கோவில் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில் அக்கட்சியினர் இன்று ரேணுகா தேவியை நேரில் வாழ்த்திப் பொன்னாடை அணிவித்தனர். இதுகுறித்து எம்.ஆர்.காந்தி கூறுகையில், “ராணுத்துக்காக தன் கணவரையும், இரண்டு மகன்களையும் அனுப்பிய வீரத்தாய் ரேணுகா தேவியை, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதன் அடிப்படையில் நேரில் சென்று வாழ்த்தினோம். நம் தேசம் காக்கும் பணிக்கு வீரர்களை அனுப்புவதில் தாய்மார்களின் பங்கு அதிகம் உண்டு” என்றார். `வீரத்தாய்’ விருது பெற்ற சந்திரிகா தேவிக்கு பல தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.