ஐபோன் 13 சீரிஸ் அறிமுகம்: மொத்தம் 4 மாடல்கள்; இந்திய விலைகளும் அறிவிப்பு!

ஹைலைட்ஸ்:

4 புதிய ஆப்பிள் ஐபோன் மாடல்கள் அறிமுகம்
அவைகள் ஐபோன் 13, 13 மினி, 13 ப்ரோ, 13 ப்ரோ மேக்ஸ் ஆகும்
இந்திய விலைகளும் அறிவிப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களாக வெண்ணிலா ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ மற்றும்
ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்
நேற்று (செப்.13) இரவு நடந்த ‘கலிபோர்னியா ஸ்ட்ரீமிங்’ மெய்நிகர் வெளியீட்டு நிகழ்வின் வழியாக அறிமுகம் செய்யப்பட்டது.

5050mAh பேட்டரி; 6.5-இன்ச் டிஸ்பிளே; தரமான பட்ஜெட் விலையில் NOKIA G10 அறிமுகம்!

பல லீக்ஸ் மற்றும் வதந்திகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு வெளிவந்த ஐபோன் 12 சீரீஸை போலவே, இம்முறையும் நான்கு புதிய ஐபோன் 13 மாடல்கள் வெளியாகி உள்ளன. நான்கும் ஒரே மாதிரியான ஸ்க்ரீன் அளவுகள் மற்றும் அவற்றின் முன்னோடிகளுக்கு ஒத்த “ஒட்டுமொத்த” வடிவமைப்பைக் கொண்டுள்ளன.

ஆளுக்கு 2 பார்சல்! வெறும் ரூ.6,000 க்குள் நோக்கியா C01 பிளஸ் அறிமுகம்!

இந்த தலைமுறை ஐபோன் மாடல்களில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளாக – சிறந்த பேட்டரி ஆயுள், மாற்றியமைக்கப்பட்ட கேமராக்கள், ஒரு சினிமா வீடியோ ரெக்கார்டிங் மோட் ஆகியவைகளை கூறலாம்.

மேலும் நான்கு புதிய ஐபோன்களுமே புத்தம் புதிய A15 பயோனிக் SoC மூலம் இயக்கப்படுகிறது, மேலும் நான்குமே iOS 15 உடன் அனுப்பப்படும்.

இந்தியாவில் iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro, iPhone 13 Pro Max மாடல்களின் விலை, விற்பனை தேதி:

ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி மாடல்கள் தலா மூன்று ஸ்டோரேஜ் விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

ஐபோன் 13 மினி – 128 ஜிபி – ரூ.69,900

ஐபோன் 13 மினி – 256 ஜிபி – ரூ.79.900

ஐபோன் 13 மினி – 512 ஜிபி – ரூ 99,900.

ஐபோன் 13 – 128 ஜிபி – ரூ.79,900

ஐபோன் 13 – ,256 ஜிபி – ரூ.89,900

ஐபோன் 13 – 512 ஜிபி – ரூ.99,900

மறுகையில் உள்ள ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் இரண்டுமே 1TB வரையிலான ஸ்டோரேஜ் விருப்பம் வரை செல்கின்றன.

ஐபோன் 13 ப்ரோ – 128 ஜிபி – ரூ.1,19,900

ஐபோன் 13 ப்ரோ – 256 ஜிபி – ரூ.1,29,900

ஐபோன் 13 ப்ரோ – 512 ஜிபி – ரூ.1,49,900

ஐபோன் 13 ப்ரோ – 1 டிபி – ரூ.1,69,900

ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் -128 ஜிபி – ரூ.1,29,900

ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் – 256 ஜிபி – ரூ.1,39,900

ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் – 512 ஜிபி – ரூ.1,59,900

ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் – 1டிபி – ரூ.1,79,900

இந்தியா மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில், செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் ஐபோன் 13 சீரீஸ் மாடல்களின் முன்பதிவு தொடங்கும், சில்லறை விற்பனை செப்டம்பர் 24 முதல் தொடங்கும்.

ஐபோன் 13 மினி மற்றும் ஐபோன் 13 அம்சங்கள்:

ஐபோன் 13 மினி மற்றும் ஐபோன் 13 ஆகிய இரண்டுமே ஓஎல்இடி சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேக்களுடன் ஸ்டஅண்டர்ட் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் எச்டிஆர் 10, எச்எல்ஜி எச்டிஆர் மற்றும் டால்பி விஷன் போன்ற ஆதரவுடன் வருகின்றன.

இவைகளின் வடிவமைப்பு சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது, பின்புறத்தில் ஒரு சிறிய நாட்ச் மற்றும் குறுக்காக உட்பொதிக்கப்பட்ட கேமரா அமைப்பை பெறுகின்றன.

கடந்த ஆண்டின் ஐபோன் 12 மற்றும் 12 மினியை விட இதன் டிஸ்பிளே 28 சதவிகிதம் பிரகாசமானது என்றும், 20 சதவிகிதம் சிறிய அளவிலான நாட்ச்சை பெறுகிறது என்றும் கூறப்படுகிறது.

டிஸ்பிளேவின் அளவு அப்படியே உள்ளது: ஐபோன் 13 மினி 5.4 இன்ச் ஸ்க்ரீனைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் ஐபோன் 13 ஆனது 6.1 இன்ச் ஸ்க்ரீனைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த 2 மாடல்களுமே 5ஜி திறன் கொண்ட ஏ 15 பயோனிக் சிப்செட்டை பேக் செய்கிறது. இது அதன் போட்டியாளர்களை விட 50 சதவீதம் வேகமான சிபியு மற்றும் 30% சிறந்த ஜிபியு செயல்திறனை வழங்கும் என்று கூறப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஆகிய இரண்டும் டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன, இதில் 12MP யூனிட்ஸ் உள்ளன.

12 எம்பி மெயின் சென்சார் ஒரு பெரிய 1.7 மைக்ரான் பிக்சல்கள் மற்றும் எஃப்/1.5 லென்ஸைக் கொண்டுள்ளது, இதனால் முன்பை விட 47 சதவிகிதம் அதிக ஒளியைக் கைப்பற்ற முடியும் என்று ஆப்பிள் கூறுகிறது, அதே நேரத்தில் 12 எம்பி அல்ட்ரா-வைட் சென்சார் ஆனது எஃப்/2.4 லென்ஸ் மற்றும் 120 டிகிரி எஃப்ஓவி ஆனது 50% அதிக ஒளியை கேப்சர் செய்யுமாம்.

கூடுதலாக, ஐபோன் 13 மற்றும் 13 மினி மாடல்களும் sensor-shift stabilisation-ஐ ஆதரிக்கும். உடன் ஒரு புதிய சினிமா மோட் மற்றும் ஃபோகஸ் டிரான்சிஷன் ஆதரவும் உள்ளது.

செல்பீ மற்றும் வீடியோ அழைப்பிற்காக, இரண்டு போன்களும் முன்பக்கத்தில் 12 எம்பி ட்ரூடெப்த் கேமராவைக் கொண்டுள்ளன.

சென்சார்-ஷிப்ட் ஓஐஎஸ் அம்சம், இதுவரை வெறும் 12 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு மட்டுமே அணுக கிடைத்தது, ஆனால் 2021 ஆம் ஆண்டில் நான்கு ஐபோன் மாடல்களிலும் கிடைக்கிறது.

ஐபோன் 13 மினி பேட்டரி ஆயுள் ஆனது ஐபோன் 12 மினியை விட 1.5 மணிநேரம் அதிகம் என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் ஐபோன் 13 அதன் முன்னோடிகளை விட 1.5 மணி நேரம் வரை அதிகம் நீடிக்கும்.

புதிய ஐபோன்களின் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 5 ஜி இணைப்பு, செராமிக் ஷீல்ட், மேக் சேஃப் சார்ஜருக்கான ஆதரவு மற்றும் ஐபி 68 நீர்-எதிர்ப்பு வடிவமைப்பு ஆகியவைகளை கூறலாம்.

ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸின் அம்சங்கள்:

ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டுமே ஏ15 பயோனிக் சிப்செட் மற்றும் ஐஓஎஸ் 15 ஆகியவற்றுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பயனர்களுக்கு அதிக ஸ்க்ரீன் ரியல் எஸ்டேட்டை வழங்குவதற்காக இந்த போன்களில் உள்ள நாட்ச் வடிவமைப்பு இடது மற்றும் வலது பக்கங்களில் இருந்து சிறிது “குறைக்கப்பட்டுள்ளது”.

இருப்பினும், இந்த இரண்டு ஐபோன்களுக்கும் பிரத்தியேகமான சில விஷயங்கள் உள்ளன.

ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் இரண்டும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளேக்களுடன் மிக மென்மையான அனிமேஷன் மற்றும் ஸ்க்ரோலிங்கை வழங்குகின்றன.

நீங்கள் கையாளும் போது, பயன்பாடு மற்றும் அதன் உகந்த ஸ்க்ரீன் ரெஃப்ரெஷ் வீகிதத்தைப் பொறுத்து டிஸ்பிளேவின் ரெஃப்ரெஷ் ரேட் ஆனது 10 ஹெர்ட்ஸ் முதல் 120 ஹெர்ட்ஸ் வரை செல்லும்.

மேலும் இவைகளின் முன்னோடியைப் போலவே, வழக்கமான ப்ரோ மாடல் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, அதே நேரத்தில் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆனது 6.7 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவைப் பெறுகிறது.

இரண்டுமே எஃப்/1.8 லென்ஸ் மற்றும் ஆட்டோஃபோகஸை வழங்கும் ஒரு அல்ட்ரா-வைட் சென்சாரை உள்ளடக்கிய மூன்று பின்புற கேமராக்களை பேக் செய்கிறது.

இம்முறை ஒரு புதிய டெலிஃபோட்டோ லென்ஸ் உட்பொதிக்கப்பட்டுள்ளது. இது 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 77 மிமீ போக்கல் லெங்ன்த் மற்றும் f/1.5 லென்ஸ் மற்றும் 1.9-மைக்ரான் பிக்சல்களைக் கொண்ட ஒரு வைட் சென்சார் ஆகும்.

டெலிஃபோட்டோ உட்பட இரண்டு போன்களின் கேமராக்களுமே நைட் மோட்-ஐ ஆதரிக்கின்றன. அவை 6x ஆப்டிகல் ஜூம், ஷாட்களுக்கான மேக்ரோ மோட், ஸ்மார்ட் எச்டிஆர் 4, சினிமா மோட் மற்றும் ப்ரோரெஸ் 4 கே 30 ரெக்கார்டிங் ஆகியவற்றை ஆதரிப்பதாக கூறப்படுகிறது.

AR ஆப்களுக்கான லிடார் ஸ்கேனர் iPhone 13 Pro மற்றும் Pro Max ஆகிய இரண்டிலும் கிடைக்கிறது; இது கடந்த ஆண்டு ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது.

ஐபோன் 13 ப்ரோ மாடல் ஆனது 12 ப்ரோவை விட 1.5 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும், அதேசமயம் அதன் 13 ப்ரோ மேக்ஸ் ஆனது 12 ப்ரோ மேக்ஸை விட 2.5 மணி நேரம் நீடிக்கும் என்று ஆப்பிள் கூறுகிறது.

லீக்ஸ்கள் வழியாக வெளிப்பட்டது போல, இந்த புதிய மாடல்களில் ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே இல்லை, ஆனால் ஆப்பிள் இந்த மாடல்களில் புதிய 1TB ஸ்டோரேஜ் வகையை சேர்த்துள்ளது.

ஐபோன் 13 மினி மற்றும் ஐபோன் 13 ஐப் போலவே, ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸும் 5 ஜி திறன் கொண்டவை மற்றும் மேக் சேஃப் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன.

இவைகளும் செராமிக் ஷீல்ட் மற்றும் ஐபி 68 நீர் மற்றும் தூசி-எதிர்ப்பு மதிப்பீட்டையும் கொண்டுள்ளது.

கடைசியாக, ஆப்பிளின் முழு ஐபோன் 13 சீரிஸ் மாடல்களும் இன்னுமும் யூ.எஸ்.பி-சி-க்கு செல்வதற்கு பதிலாக லைட்னிங் போர்ட்களையேப் பயன்படுத்துகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.