ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி| Dinamalar

புதுடில்லி: ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற இருக்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு பி.சி.சி.ஐ., அனுமதி வழங்கி உள்ளது.

இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடந்தது. 29 போட்டிகள் முடிந்த நிலையில் வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள 31 ஐ.பி.எல்., போட்டிகள், செப். 19ல் எமிரேட்சில் துவங்க உள்ளன.

இந்நிலையில், பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும். சென்னை மற்றும் மும்பை அணிகள் விளையாடும் முதல் போட்டியை பார்க்க நாளை முதல் www.iplt20.com மற்றும் platinumList.net என்ற இணையதளங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ரசிகர்கள், கோவிட் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.