கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இந்தியர்.. மரியான் பாணியில் நேர்ந்த அவலம்.. துடிக்கும் குடும்பம்!

கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இந்தியர்.. மரியான் பாணியில் நேர்ந்த அவலம்.. துடிக்கும் குடும்பம்!

சண்டிகர்: மேற்கு ஆப்ரிக்காவில் கடல் கொள்ளையர்களால் பஞ்சாப்பை சேர்ந்த பங்கஜ் குமார் என்ற நபர் கடத்தப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரை உடனே மீட்டு கொடுக்க வேண்டும் என்று இவரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

கரீபிய தீவுகளில் உள்ள நாடான கேமரூனில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் நோக்கி எம்வி டம்பன் என்ற இந்திய சரக்கு கப்பல் சென்று இருக்கிறது. இதில் மொத்தம் 17 பேர் இருந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த கப்பல் நமிபியா அருகே சென்ற போது கபோன் கடல் பகுதி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இங்கு கப்பல் ஒதுங்கியது. அங்கு சில நாட்கள் கப்பல் ஒதுங்கி இருந்த நிலையில் திடீரென கப்பலுக்கு உள்ளே வந்த கடல் கொள்ளையர்கள் கப்பலில் இருந்து பொருட்களை எடுத்துவிட்டு அங்கு இருந்த ஊழியர்கள் எல்லோரையும் சிறை பிடித்துள்ளனர்.

ஆசிரியர் வேலைவாய்ப்பு 2021.. தமிழ்நாடு அரசு வேலை.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. விவரம்!ஆசிரியர் வேலைவாய்ப்பு 2021.. தமிழ்நாடு அரசு வேலை.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. விவரம்!

தாக்குதல்

தாக்குதல்

மொத்தம் 17 பேரை கடல் கொள்ளையர்கள் சிறை பிடித்தனர். இதில் கடல் கொள்ளையர்களிடம் சண்டை போட்ட ஊழியர்கள் விகாஸ் நாவ்ரியால், சுனில் கோஷ் ஆகியோர் கடல் கொள்ளையர்களால் சுடப்பட்டனர். ஆனால் பின்னர் இவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர். இந்த கப்பலில் கேரளாவை சேர்ந்த இரண்டு ஊழியர்களும் இருந்துள்ளனர்.

சிகிச்சை

சிகிச்சை

அவர்களும் கடல் கொள்ளையர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர். கப்பலில் இருந்த பஞ்சாப்பை சேர்ந்த பங்கஜ் குமார் என்ற நபரை கடல் கொள்ளையர்கள் கடலில் தூக்கி வீசி உள்ளனர். பின்னர் கடலில் இறங்கி அவரை மற்றும் தூக்கி வேறு கப்பலில் போட்டுவிட்டு அவரை கடத்திக்கொண்டு தப்பித்து சென்றனர். இந்த நிலையில் இரண்டு வாரமாக இவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.

கடத்தல்

கடத்தல்

கப்பலுக்கு சொந்தமான Proactive Shipping Management நிறுவனமும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது. அவர் எங்கே இருக்கிறார், கடல் கொள்ளையர்கள் அவரை எங்கே கொண்டு, சென்றார்கள் ஏன் கொண்டு சென்றார்கள் என்று பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை எப்படியாவது மீட்டு கொடுக்க வேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் மன்றாட தொடங்கி உள்ளனர்.

எங்கே இருக்கிறார்?

எங்கே இருக்கிறார்?

கடந்த இரண்டு வருடம் முன் இவருக்கு திருமணம் ஆனது. இவர் மனைவியுடன் 2 மாதம் மட்டுமே இருந்த நிலையில் உடனே பணிக்கு திரும்பினார். ஆனால் இப்போது இவர் கடத்தப்பட்டு எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவரை எப்படியாவது மீட்டு கொடுக்க வேண்டும் என்று பஞ்சாப்பில் இவர்கள் போலீசாரிடம் முறையிட்டு உள்ளனர். ஆனால் போலீஸ் தரப்பில் இருந்து இவர்களுக்கு சரியான உதவி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

English summary
Indian kidnapped by Caribbean Pirates near Namibia: Family asks for help from Punjab police.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.