கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி மண்ணெண்ணெய் கேனுடன் தர்ணா: அரக்கோணத்தில் பரபரப்பு

அரக்கோணம்: அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகம் அருகே கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி  கர்ப்பிணி ஒருவர் தனது கைக்குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதியைச் சேர்ந்தவர் அபிராமி(23), நர்ஸ். இவருக்கு கைக்குழந்தை உள்ளது. மேலும், தற்போது கர்ப்பிணியாக உள்ளார். நேற்றுமுன்தினம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மங்கம்மாபேட்டை பகுதியில் தனது கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி திடீர் சாலைமறியலில் ஈடுபட முயன்றார். அப்போது, அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட அபிராமியை மீட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து ெசன்று விசாரித்தனர். விசாரணையில், அபிராமி போலீசாரிடம் கூறியதாவது: மங்கம்மாபேட்டையை சேர்ந்த லாரி டிரைவர் பிரகாஷ்(30), மதுரைக்கு லாரியை ஓட்டி வந்தபோது விபத்தில் சிக்கி நான் வேலை பார்க்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தபோது எங்களிடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலித்து என்ைன திருமணம் ெசய்து கொண்டார். தற்போது என்ைன விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அவரை அரக்கோணம் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் கைக்குழந்தையுடன் தேடி அலைந்தேன். அப்போது அவருக்கு ஏற்கனவே திருமணமானது ெதரிந்தது. அவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும் என்றார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், இந்த திருமணம் மதுரை அருகே நடந்ததால் இதுதொடர்பாக அங்கே சென்று புகார் அளிக்கும்படி அபிராமியிடம் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம். இதனால் மனமுடைந்த அபிராமி, 2வது நாளாக நேற்று இரவு அரக்கோணம் தாலுகா அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் தனது தாய், கைக்குழந்தையுடன் மண்ணெண்ணெய் கேனுடன் தர்ணாவில் ஈடுபட்டார். என்னை எனது கணவனுடன் சேர்த்து வைக்க வேண்டும். இல்லையென்றால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என கதறினார். இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து அபிராமியிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். பின்னர் ஆட்டோவில் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு டிஎஸ்பி புகழேந்திகணேஷ், விசாரணை நடத்தினார். அப்போது டிஎஸ்பி, பிரகாசுக்கு போன் செய்துள்ளார். அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாகவும், அவரை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாகவும் டிஎஸ்பி தெரிவித்தார். இதையடுத்து அபிராமியை அரக்கோணத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.