சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் விவரங்கள்.!

சியோமி நிறுவனம் இன்று நிகழ்த்திய அதன் வெளியீட்டு நிகழ்வில் மிகவும் எதிர்பார்த்த சியோமி 11டி, சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. அதாவது சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் பல்வேறு அசத்தலான அம்சங்களுடன்
வெளிவந்துள்ளது.

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் விவரங்கள்.

குறிப்பாக விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனில் இருக்கும் அனைத்து அம்சங்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-bit flat AMOLED true-colour டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் விவரங்கள்.

குறிப்பாக சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் வசதி ஸ்மார்ட்போனை வேகமாக செயல்பட அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிக்கு மிகவம் அருமையாக செயல்படும்.

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெலிமேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே
மொத்தம் 20எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் விவரங்கள்.

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த
ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பப்பில்கம் ப்ளூ, பீச் பிங்க், ஸ்னோஃப்ளேக் ஒயிட் மற்றும் ட்ரஃபிள் பிளாக் நிறங்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4250 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, டூயல் ஸ்பீக்கர் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன்.

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் விவரங்கள்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, IR பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.30,300-ஆக உள்ளது. முன்பு கூறியபடி, விலைக்கு தகுந்த அனைத்து
அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ததை தொடர்ந்து சியோமி நிறுவனமும் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்பிள் நிறுவனம்
ஐபோன் 13 மாடல்களை அறிமுகம் செய்ததை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11, ஐபோன் 12. ஐபோன் 12 மினி மாடல்களின் விலையை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய விலை குறைப்பு ஆப்பிள் இணையதளத்தில் பிரதிபலிக்கிறது

English summary
Xiaomi 11 Lite 5G NE Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.