செப்டம்பர் 19: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை வரும் செப்டம்பர் 19-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த
கேலக்ஸி எம்52 5ஜி மாடல் ஆனது சற்று உயர்வான விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

செப்டம்பர் 19: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்52

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.7-இன்ச் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது. 1,080×2,400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு
சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சாதனம் பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம்.

இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதன்பின்பு ஆண்ட்ராய்டு
12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிப்செட் வசதி வேகமாக செயல்படும் என்றே கூறலாம். பின்பு கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம்
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்52

இந்த கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும். மேலும் இந்த சாதனத்தின் எடை 175 கிராம் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த சாதனம் மூன்று நிறங்களில் வெளிவரும் என சாம்சங் நிறுவனம் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் பின்பறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்
அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் கேமரா அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக இரவு நேரங்களில் கூட இந்த
சாதனத்தின் கேமராக்களை பயன்படுத்தி துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.

செப்டம்பர் 19: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்52

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைரேகை சென்சார், பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
மேலும் இந்த சாதனம் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேபோல் சாம்சங் நிறுவனம் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும். அதாவதுவிரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பதால் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது சாம்சங். மேலும் ரியல்மி, சியோமி, ஒப்போ நிறுவனங்களும் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் ஐபோன் 13 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே விரைவில் சாம்சங் நிறுவனமும் சற்று உயர்வான விலையில் அதிநவீன ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Samsung Galaxy M52 5G with 64 Mega Pixel Camera Launching in India on September 19: Read more about this in Tamil GizBot

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.