திண்டுக்கல்லில் செல்போன் கடை உரிமையாளரை ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சி Sep 15, 2021

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் செல்போன் கடை உரிமையாளரை ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திண்டுக்கல் பெரியகடைவீதி பகுதியை சேர்ந்த மீரான் பாபு அதே பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். மதியம் கடையிலிருந்து வேலை விஷயமாக சட்டாம்பிள்ளை தெரு பகுதியில் நடந்து வந்துகொண்டிருந்தவரை மடக்கிய 3 பேர் கொண்ட ஒரு கும்பல், அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியது.

நிலை தடுமாறி கீழே விழுந்தவரை ஆத்திரம் தீர வெட்டிய அந்தக் கும்பல், ஸ்கூட்டியில் வந்த மற்றொருவனுடன் தப்பிச் சென்றது.

உயிருக்கு ஆபத்தான மீரான் பாபு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த கொலை முயற்சி யாரால், ஏன் அரங்கேற்றப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.