நரைமுடியை முடியோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சமீரா ரெட்டி! அப்பாவுக்கு போல்டாக கொடுத்த பதில்!

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த “வாரணம் ஆயிரம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாவர் சமீரா ரெட்டி. இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், அதன் பின்னர் தமிழில்‘வெடி’,‘அசல்’,‘வேட்டை’ என சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் படவாய்ப்புகள் குறைந்தது. இதையடுத்து 2014ம் ஆண்டு மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அக்ஷய் குமார் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். 

அதன் பின்னர் படங்களில் நடிப்பதையே முற்றிலும் தவிர்த்துவிட்டார். ஏற்கனவே ஒரு மகனுக்கு தாயாக இருந்த சமீராவுக்கு, இரண்டாவது குழந்தையும் பிறந்தது. அப்போது கர்ப்பமாக இருக்கும் போது மிகவும் போல்டாக நீருக்கு அடியில் கவர்ச்சி போஸ் கொடுத்து சோசியல் மீடியாவை அதிரவைத்தார். 

sameera reddy bold replay for her father

இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு ஓவராக உடல் எடை கூடிய சமீரா ரெட்டி, குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். அதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரது குண்டான உடலை கேலி செய்து வந்தனர். பின்னர் இரண்டாவது குழந்தை பிறந்ததும் தன்னுடைய உடல் எடையை குறைத்தார்.

sameera reddy bold replay for her father

எப்போதும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் சமீரா, தான் நரைமுறையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, தன்னுடைய அப்பாவின் கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார். “அந்த பதிவில், ” உன்னோட வெள்ளை முடிகளை ஏன் மறைக்காமல் அப்படியே வைத்திருக்கிறாய் என அவரது  தந்தை கேட்டதாகவும், பார்ப்பவர்கள் தனக்கு நரை முடி இருக்கிறது என நினைப்பார்கள் என வருத்தத்தோடு அவர் சொன்னார், அதற்கு நான் சொன்னேன், அவர்கள் அப்படி நினைத்தால் எனக்கு என்ன? அதனால் நான் வயதானவள் ஆகிவிடுவேனா? அழகில்லாதவள் ஆகி விடுவேனா? பார்ப்பவர்கள் கூறுவதை நான் மதிப்பதில்லை, அது என்னை கொஞ்சமும் கூட பாதிக்கப்போவது இல்லை. முடியை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நான் கலர் செய்வேன், ஆனால் இப்போது சுதந்திரமாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவு தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

  • samera reddy
  • tamil cinema
  • kollywood
  • bold replay

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.