நீட் கோரம் : மேலும் ஒரு உயிர்காவு

தமிழ்நாட்டு பாடநூலுக்கு தொடர்பில்லாத நீட் தேர்வுதான் மருத்துவ சேர்க்கைக்கு நுழைவாயில் என ஒன்றிய அரசு அறிவித்த நாளில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவக் கனவில் இருக்கும் மாணவர்கள் அதீத விரக்தியில் இருந்து வருகிறார்கள். உச்சகட்டமான அனிதா தொடங்கி தற்கொலைகளும் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மரணத்தை சந்தித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீட் தேர்வை (NEET Exam) ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் அனிதா 2017ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். ஆனாலும் அசராத அரசுகள் நீட் தேர்வை தொடர்ந்து நடத்திவரும் நிலையில் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது, தனியாக பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிப்பவர்களுக்கு ஆதரவானது, கேள்வித்தாள் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கும் தனியார் கல்லூரிகளில் பல லட்சம் செலவு செய்ய தயாராக இருப்பவர்களுக்கும் ஆதரவானது என பல கல்வியாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தும் செவி கொடுக்காத ஒன்றிய அரசுக்கு (Central Government) இந்த ஆண்டு நாம் கொடுத்திருக்கும் விலை மூன்றாவது பலி.

ALSO READ:தற்கொலை வேண்டாம்! உங்கள் சகோதரனாக கேட்கிறேன்: முதலமைச்சர் உருக்கமான கடிதம்

நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்னரே சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து நேற்று அரியலூர் கனிமொழி தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து “உங்கள் சகோதரனாக கைகூப்பி கேட்கிறேன்” என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்னும் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் மனோதிடத்தை வலிமையாக்க மக்கள் நல்வாழ்வுத்துறை ஃபோன் வழியாக கவுன்சிலிங் கொடுக்கும் திட்டத்தினை இன்று தொடங்கியிருக்கிறது. அதே நேரத்தில் இப்படி ஒரு சோகம் நடந்திருப்பது அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

தமிழ்நாட்டில் (Tamil Nadu) பள்ளித் தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என திங்கட்கிழமை சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அது தற்போது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் இப்படியான நடவடிக்கை எதுவும் தற்கொலைகளை தடுக்கவில்லை என்றும் உடனடி நீட் விலக்கு ஒன்றே தீர்வு என்றும் மக்கள் குமுற தொடங்கியிருக்கின்றனர்.

ALSO READ: NEET vs Counseling: நீட் எழுதிய மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் கவுன்சிலிங்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.