பயங்கரம்… திமுக முன்னாள் எம்.பி.யின் பேரன் கூலிப்படையினரால் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை..!

ராசிபுரத்தில் திமுகவின் முதல் மாநிலங்களவை எம்.பி.யின் பேரன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த கொல்லிமலை அருகே உள்ள பேளுக்குறிச்சி மாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). விவசாயி. இவரது மனைவி சுகன்யா(50). இவர்களுக்கு சுரேஷ் என்ற மகனும், சுபி என்ற மகளும் உள்ளனர். சுரேஷ் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். சுபி திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். ராஜேந்திரனும், சுகன்யாவும் மாந்தோப்பில் தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.

Former DMK MP Grandson murder...police investigation

இந்நிலையில், நேற்று இரவு ராஜேந்திரன் வீட்டுக்கு வெளியே கட்டிலில் அமர்ந்திருந்தார். சுகன்யா வீட்டின் உள்ளே வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் ராஜேந்திரனை சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடனே சத்தம் கேட்டு வெளியில் வந்த சுகன்யா கணவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து கதறி துடித்தார். அதற்குள் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. 

Former DMK MP Grandson murder...police investigation

இது தொடர்பாக உடனே பேளுக்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராஜேந்திரன் திமுகவின் முதல் மாநிலங்களவை எம்.பி. சோமசுந்தரத்தின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.