பள்ளிக்கு வர மாணவர்களை கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை : உயர்நீதிமன்றம்

சென்ற வருடத்தில், கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து, இருந்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. 

கொரோனா தொற்று பரவல், இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்த நிலையில், தற்போது பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, இந்த மாதம் 1ம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்கள் விருப்பம் இருந்தால் பள்ளிக்கு வரலாம் என அறிவுறுத்தியுள்ள அரசு, மாணவர்களை பள்ளிக்கு வரும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. எனினும், சில பள்ளிகள் மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு வரும் படி பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

ALSO READ | தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 25.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி 

கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்கள் விருப்பம் இருந்தால் பள்ளிக்கு வர அரசு அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களை கட்டாயப்படுத்தி வரவழைக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. எனினும், சில பள்ளிகள் மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு வரும் படி கட்டாயப்படுத்துவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த பொதுநல வழக்கில், 18 வயதுக்கு கீழே இருப்பவர்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இது குறித்து தமிழக முதன்மை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கின் மீதான விசாரணையை வரும் 30-ஆம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 ALSO READ | செப்டம்பர் 12: தமிழகத்தில் இன்று 1608 பேருக்கு புதிதாக பாதிப்பு, 22 பேர் பலி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.