'பான்டமிக் நாயகன்' நடிகர் சோனு சூதுக்கு சொந்தமான 6 இடங்களில் ஐடி ரெய்டு

ஹைலைட்ஸ்:

சோனு சூத் அலுவலகத்தில் ஐடி ரெய்டு
அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசிய சோனு சூத்

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் வில்லனாக நடித்து வரும்
சோனு சூத்
பான்டமிக் காலத்தில் ஏழை மக்களின் ரட்சகனாக மாறிவிட்டார். உதவி என்று கேட்பவர்களுக்கு உடனே உதவுகிறார்.

முதல் முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உதவி செய்தார். மேலும் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மாணவர்களை அழைத்து வந்தார், பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்தார்.

இந்நிலையில் மும்பையில் சோனு சூதுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருக்கும் கம்பெனி என்று மொத்தம் 6 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

டெல்லி அரசின் பள்ளி மாணவர்களுக்கான மென்டர்ஷிப் திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடராக சோனு சூதை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில் சோனுவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்திருக்கிறது.

சோனு சூத் அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த பிறகு அவர் அடுதத் ஆண்டு நடக்கும் பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவார் என்று பேச்சு கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்க அம்முவுக்கு வாழ்த்துக்கள்: நயன்தாரா அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய விக்கி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.