பிரிட்டன் பிரதமரின் தாய் மரணம்| Dinamalar

லண்டன் : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாய் நேற்று முன்தினம் இறந்தார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜான்சன்உள்ளார்.இவரது தாய்சார்லட் ஜான்சன் வால், 79. ஓவியரான இவர், பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுஇருந்தார்.அவரது உடல் நிலை மோசமானதையடுத்து, லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் இறந்தார். ‘என் குடும்பத்தின் தலைவரை இழந்துவிட்டேன்’ என, போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.