புதிய சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனை ஜெர்மனியில் அறிமுகம் செய்துள்ளது. இன்னும் இந்த புதிய சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்22

சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனின் விலையை வெளியிடவில்லை அந்நிறுவனம். விரைவில் இந்த சாதனத்தின் விலை வெளியிடப்படும்என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கருப்பு, வெள்ளை, மற்றும் நீல நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இப்போது கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்22

சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 × 720 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு இந்த கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த பாதுகாப்பு வசதியைக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதான் ஃபர்ஸ்ட்- 1 டிபி சேமிப்பு, திரைப்பட தர கேமரா பதிவுடன் ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்!இதுதான் ஃபர்ஸ்ட்- 1 டிபி சேமிப்பு, திரைப்பட தர கேமரா பதிவுடன் ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்!

சாம்சங் கேலக்ஸி எம்22

சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்தது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

மிரட்டலான தோற்றத்தில் அதிக சக்தியுடன் ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் ஆப்பிள் ஐபோன் 13 மினி அறிமுகம்...மிரட்டலான தோற்றத்தில் அதிக சக்தியுடன் ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் ஆப்பிள் ஐபோன் 13 மினி அறிமுகம்…

புதிய கேலக்ஸி எம்22

இந்த புதிய கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், ஒன்யூஐ 3.1 கஸ்டம் ஸ்கின் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா சி01 பிளஸ், நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்.! ஆரம்ப விலை ரூ.5,999 மட்டுமே.!நோக்கியா சி01 பிளஸ், நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்.! ஆரம்ப விலை ரூ.5,999 மட்டுமே.!

கேலக்ஸி எம்22

அதேபோல் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுடன் வெளிவரவில்லை, அதாவது 4ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் மாடல்.

ஜியோ டுவிஸ்ட்- அதை எடுத்துட்டு இதை கொடுத்தாங்க பாருங்க- தினசரி டேட்டா, வரம்பற்ற அழைப்புகளுடன் புதிய திட்டம்!ஜியோ டுவிஸ்ட்- அதை எடுத்துட்டு இதை கொடுத்தாங்க பாருங்க- தினசரி டேட்டா, வரம்பற்ற அழைப்புகளுடன் புதிய திட்டம்!

சாம்சங் கேலக்ஸி எம்2

சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்களை இடம்பெற்றுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ங் கேலக்ஸி எம்22

சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல் இந்த கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் இந்த சாம்சங் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய
ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதுவும் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது சாம்சங் நிறுவனம். அதாவது விரைவில் 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால், தொடர்ந்து பல நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.

English summary
Samsung Galaxy M22 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.