போலியான முகமூடி எதற்கு?: வைரலாகும் சமீரா ரெட்டியின் அட்டகாசமான பதிவு!

பாலிவுட் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை
சமீரா ரெட்டி
. இவர் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சூர்யா ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி, கடந்த 2014-ம் ஆண்டு அக்‌ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய சமீராவுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். நடிப்பதில் இருந்து விலகி இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் சமீரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதில், ‘நான் ஏன் எனது வெள்ளை முடியை மறைக்கவில்லை என்று என் அப்பா கேட்டார். மக்கள் என்னைப் பற்றி நினைப்பது பற்றி அவர் கவலைப்பட்டார். அவர்கள் அப்படி நினைத்தால் என்ன? எனக்கு வயதாகி விட்டது, நான் அழகாயில்லை என்று அர்த்தமா? நான் நேர்த்தியாக இல்லை, பார்ப்பதற்கு அழகாக இல்லை என்று பொருள்படுமா? நான் முன்பு போல் இதைப் பற்றி சிந்திப்பதில்லை என்றும் சுதந்திரம் என்னை அந்த எண்ணத்திலிருந்து விடுவிக்கிறது என்றும், நான் அவரிடம் சொன்னேன்.

மூன்று நாட்களில் சக்சஸ் பார்ட்டியா?: சந்தானத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

நான் பொதுவாக ஒவ்வொரு 2 வாரங்களுக்கும் முடிக்கு வண்ணம் தீட்டுவேன். அதனால் அந்த வெள்ளை நிறத்தை யாராலும் கண்டு பிடிக்க முடியாது. இன்று எனக்கான இனிமையான பொழுதை எடுத்துக் கொண்டு, எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது வண்ணம் பூச முடிவு செய்தேன். நான் தனியாக இல்லை என்பது எனக்குத் தெரியும். பழைய சிந்தனை செயல்முறைகள் உடைக்கப்படும்போது தான் மாற்றமும் ஏற்பும் தொடங்குகிறது.

View this post on Instagram

A post shared by Sameera Reddy (@reddysameera)

எப்போதும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கை இருக்கும் போது போலியான முகமூடி எதற்கு? என் அப்பா புரிந்து கொண்டார். ஒரு தந்தையாக அவரது கவலையை நான் புரிந்து கொண்டேன். ஒவ்வொரு நாளும் நாம் முன்னேற கற்றுக்கொள்வோம், சிறிய மாற்றங்களில் அமைதியைக் காண்கிறோம். மேலும் அந்த சிறிய படிகள்தான் நம்மை மிகப் பெரிய இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. இவ்வாறு பதிவிட்டுள்ளார் சமீரா ரெட்டி. அவரின் தன்னம்பிக்கையான இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.