மசூதியில் வெடிகுண்டு வீச்சு திருநங்கைக்கு 53 ஆண்டு சிறை| Dinamalar

செயின்ட் பால் : அமெரிக்காவில் மசூதி ஒன்றில், ‘பைப்’ வெடிகுண்டு வீசிய வழக்கில், திருநங்கைக்கு, 53 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், ‘வைட் ராபிட்ஸ்’ என்ற இனவாத குழுவின் தலைவரான மைக்கேல் ஹாரி, புளுமிங்டன் நகரில் உள்ள டர் அல் – பரூக் மசூதியில் பைப் வெடிகுண்டு வீசியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, ஒன்பது மாதங்கள் கழித்து, மைக்கேல் ஹாரி உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டனர்.இடைப்பட்ட காலத்தில் மைக்கேல் ஹாரி, ஆபரேஷன் செய்து திருநங்கையாக மாறிவிட்டார். எமிலி கிளாரி ஹாரி என, தன் பெயரை மாற்றிக் கொண்டார்.இந்நிலையில், மசூதி குண்டு வெடிப்பு வழக்கில், எமிலிக்கு 53 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில் நீதிபதி டோனாவன் பிராங் கூறியுள்ளதாவது:

பன்முக கலாசாரத்தில் ஒற்றுமை என்ற கொள்கைதான், இந்நாட்டின் பலம். அதை புரிந்து கொள்ளாத எமிலிக்கு, 636 மாதங்களுக்கு குறைவாக தண்டனை வழங்குவது, சட்டத்தை அவமதித்தது போலாகும். எனவே 53 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.சிரியாவில் உள்ள ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேருவதற்கு முன், பலர் டர் அல் – பரூக் மசூதியில் தொழுகை நடத்திச் சென்றுள்ளனர். மசூதி மீது எமிலி குண்டு வீச இதுவே காரணம் என, கூறப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.