முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திடீர் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில், அரசுத் துறை செயலர்களுடன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

16-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த மே 11, 12 தேதிகளிலும், ஜூன் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலும் நடைபெற்றது. இரண்டாம் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 13-ம் தேதி வரை நடைபெற்றது.

இக்கூட்டத்தொடர் ஆளுநர் உரையாற்றிய நாளையும் சேர்த்து மொத்தம் 28 நாட்கள் நடைபெற்றது. பேரவையில் ஜூன் 21-ம் தேதி ஆளுநர் உரையாற்றினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் பதிலுரை 3 நாட்கள் நடைபெற்றது.

சசிகலா அண்ணன் மகன் சுதாகரன் சொத்துகள் முடக்கம்!

2021 – 22 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை முதன்முறையாக காகிதமில்லா இ – பட்ஜெட்டாக ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் முதன்முறையாக வேளாண் பட்ஜெட் 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கைகள் மீதான பொது விவாதமும், பதிலுரையும் 4 நாட்கள் நடைபெற்றது.

மானியக் கோரிக்கை மீது 17 நாட்கள் விவாதம் நடைபெற்றது. 12 சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அரசினர் சட்ட மசோதாக்கள் 30 வரப்பெற்றன; அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. மூன்று அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் 10 அறிக்கைகள் வாசித்தார்.

நீட் இல்லைன்னாலும் வாழ்க்கை இருக்கு : மு.க. ஸ்டாலின் பேசும் வீடியோ!

சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள், மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக, தி.மு.க., தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், அரசுத் துறை செயலர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். காலை 11.30 மணிக்கு இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. அனைத்துத் துறை சார்ந்த செயலாளர்களும் இதில் கலந்து கொள்கின்றனர்.

இதற்கிடையே, இந்த ஆலோசனையில் கொரோனா பரவல் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது ஊரடங்கு தளர்வுகள் குறித்து விவாதிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது. சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தில், கடந்த 3 நாட்களாக குறைந்திருந்த கொரோனா வைரஸ் தொற்று, இன்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.