ஶ்ரீலங்காவை T20யில் பந்தாடிய சவுத் ஆப்பிரிக்கா அணி!

இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.  செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி அடக்குமுறையில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  1 -1 என்று சமமான முறையில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.  இதில் இலங்கை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை கைப்பற்றியது.

டி20 தொடரையும் வெல்ல இலங்கை அணி தயாராக இருந்தது.  ஆனால் தென்ஆப்பிரிக்க அணியின் சிறப்பான ஆட்டத்தினால் டி-20 தொடரை இழந்தது இலங்கை அணி.  முதல் டி20 போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டி20 போட்டியில் 9 விக்கெட் மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  நேற்று நடைபெற்ற கடைசி மற்றும் 3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் அடித்தது.   பின்பு களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி ஒரு விக்கெட் கூட இழப்பின்றி 10 விக்கெட் வித்தியாசத்தில் 14.4 ஓவரில் வெற்றி பெற்றது. 

SA

அடுத்த மாதம் உலக கோப்பை டி20 போட்டி தொடங்க உள்ள நிலையில் இலங்கை அணியின் மோசமான டி-20 ஆட்டம் இலங்கை ரசிகர்களை ஏமாற்றி உள்ளது.  சமீபத்தில் இந்தியாவுடனான ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி டி20 தொடரை கைப்பற்றியது.  இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் தொடரை இழந்து மோசமான சரிவில் உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.