2 பேர் வாக்குவாதம் இருதரப்பு மோதலாக மாற்றம்.. பரபரப்பு சண்டையால் கத்தரிக்குத்து.. 8 பேர் கைது.!

இரண்டு பேர் வாக்குவாதம், இருதரப்பு மோதலாக மாறியதில் ஒருவருக்கு கத்தரிக்கோல் குத்து விழுந்தது. இது தொடர்பாக இருதரப்பையும் சார்ந்த 4 ~ 4 பேர் என 8 பேர் காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள ஆவடி பட்டாபிராம் தேவராஜபுரம் பகுதியை சார்ந்தவர் பாபு (வயது 33). இவர் சொந்தமாக வேன் வைத்து, தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்கி வருகிறார். இவர் இப்பகுதியில் உள்ள லட்சுமி என்பவரின் வீட்டில் தனது வேனை தினமும் நிறுத்தி வைத்து வந்துள்ளார். 

இந்நிலையில், லட்சுமியின் வீட்டிற்கு அருகேயிருக்கும் மரம், செடிகள் போன்றவற்றை வெட்டி வேன் நிறுத்தும் இடத்தில லட்சுமி போடவே, நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு வந்த பாபு, வேனை நிறுத்த இடமில்லாததால் லட்சுமியிடம் கேட்டுள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைகவனித்த அக்கம் பக்கத்தினர், இரண்டு பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை பாபுவின் அண்ணன் பிரபாகரன் (வயது 37) என்பவருக்கும், லட்சுமியின் அண்ணன் முனீஸ்வரன் (வயது 50) என்பவருக்கும் இடையே இவ்விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, இருதரப்புக்கும் ஆதரவாக அவரவர் சார்பு நபர்கள் வந்து குவிய, வாக்குவாதம் முற்றி கோஷ்டி மோதலாக மாறி இருக்கிறது. இதனால் இருதரப்பும் ஆயுதத்தால் தங்களை மாறிமாறி தாங்கிக்கொள்ள, முனீஸ்வரன் கத்தரிக்கோலால் பிரபாகரனை முதுகில் குத்தி இருக்கிறார். 

கத்தரிக்கோல் குத்து காயத்துடன் மீட்கப்பட்ட பிரபாகரன் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டு, அவருக்கு காயமுள்ள இடத்தில் 2 தையல்கள் போடப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக இருதரப்பும் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பிரபாகரன் கொடுத்த புகாரில் முனீஸ்வரன், துரைராஜ் (வயது 45), பிரபு (வயது 37), பாபு (வயது 22) என 4 பேரை கைது செய்தனர். முனீஸ்வரன் கொடுத்த புகாரில் பிரபாகரன், பிரபாகரனின் தம்பி பாபு, விஜயன் (வயது 52), ரவி (வயது 43) ஆகிய 4 பேரை கைது செய்தனர். 

வேன் நிறுத்தும் தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக இருதரப்பை சார்ந்த 8 பேரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.